அன்பின் தேவனே. இந்த நல்ல ஜெபநேரத்திற்காக உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். கர்த்தாவே, கடந்த 11 மாதங்களையும் கடந்து, இந்த 12-வது மாதத்தைக் காணச்செய்தபடியால் உமக்கு நன்றி. மிகுதியான துதி ஸ்தோத்திரங்களை என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து செலுத்துகிறேன். ஜனவரி 2024ல் 1ம் தேதியன்று இந்த ஆண்டு எப்படியிருக்குமோ என்ற கேள்வியுடன் துவக்கின என்னை. இம்மட்டும் ஆசீர்வதித்து, காத்து, நடத்தினபடியால்,உமக்கு ஸ்தோத்திரங்களைச் செலுத்துகிறேன். இந்த ஆண்டில் நீர் எனக்கும். என் குடும்பத்தாருக்கும் செய்த எல்லா நன்மையான காரியங்களுக் காகவும், உமக்கு எனது நன்றியைச் செலுத்துகிறேன். இயேசு கிறிஸ்துவே, உமது கிருபையை எனக்கு அருளி, எல்லாவிதமான தீங்குக்கும் விலக்கிக் காத்தீரே. அதற்காக உம்மைத் துதிக்கிறேன். கர்த்தாவே, இந்த ஆண்டில் என் வீட்டை வாங்க, கட்ட, அதைச் சீர்ப்படுத்த உதவி செய்தீரே, அதற்காக ஸ்தோத்திரம். என் தொழிலை விருத்தியடையச் செய்தீரே. அதற்காக ஸ்தோத்திரம். இதுவரை தடையான என் கையின் காரியங்களை வாய்க்கச் செய்தீரே. அதற்காக ஸ்தோத்திரம். என் மகன்/மகள் தேர்விலே வெற்றிப் பெறவும், புதிய வகுப்பிலே படிக்கவும் உதவினீரே, அதற்காக ஸ்தோத்திரம். கர்த்தாவே, என் மகன்/மகளின் திருமணங்களைக் கூடிவரச்செய்து நடத்தினீரே. அதற்காக ஸ்தோத்திரம். திருமணமாகி இத்தனை ஆண்டுகள் எனக்கு குழந்தையில்லை என்ற கவலையையும், குறையையும் நீக்கி எனக்கு நல்ல குழந்தையைக் கொடுத்தபடியால் உமக்கு ஆயிரம் துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன். கர்த்தாவே, என் தாயின் வயிற்றிலும், சரீரத்திலும் நெடுங்காலமாக தோன்றின வியாதியை, வேதனையை நீர் அகற்றினபடியால் உமக்கு ஸ்தோத்திரம். இயேசு கிறிஸ்துவே, எனக்கு நல்ல வேலை நீர் நிடைக்கச் செய்தீரே. அதற்காக உம்மை மகிமைப்படுத்துகிறேன். என் வாழ்வில் நான் இழந்த ஆசீர்வாதத்தை, சமாதானத்தை எனக்குக் கொடுத்ததற்காக உமக்கு ஸ்தோத்திரம். கர்த்தாவே, இதுவரை சபையை வாடகை இடத்திலும். சிறிய இடத்திலும் நடத்தினேன். ஆனால் என்மீது தயவுவைத்து, சபைக்குச் சொந்தமான இடத்தில் இந்த ஆலயத்தைக் கட்ட கிருபை செய்தீரே, அதற்காக ஸ்தோத்திரம். இன்னும் நான் அதிகமாக ஊழியம் செய்ய பெலன் தந்து ஆசீர்வதியும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபம் கேளும் பிதாவே. ஆமென்.