கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன். இந்தப் புதிய ஆண்டைக் காணச்செய்த கர்த்தராகிய தேவன், சகல காரியங்களிலும் நம்மை ஆசீர்வதிப்பாராக.
விசுவாசத்தின் தகப்பனாகிய ஆபிராமுக்கு ஒரு போராட்டமான சூழ்நிலை உருவானது. கர்த்தர், .. உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ' என்று ஆதி. 12:1ல் கூறுகிறதைப் பார்க்கிறோம். அத்துடன் பிள்ளையில்லாதிருந்த அவனுக்கு வாக்குறுதியாக ஆதி. 12:2ல் 'நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.' என்று வாக்கு மாறாதவர் கூறியிருந்தார். ஆபிராமுடன், லோத்துவும் இணைந்து, அவ்விடம் விட்டு கர்த்தர் சொன்ன இடத்திற்குச் சென்றான்.
ஆபிராம் தான் முதன் முதலில் பலிபீடத்தை உண்டாக்கின ஸ்தலம் வந்து, கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொண்டான். அந்த இடத்திலே ஆபிராமின் ஆஸ்தி பெருகிற்று. அதைப்போல் லோத்தின் ஆஸ்தியும் பெருகிற்று. இவ்விரு மேய்ப்பருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. ஆபிராம் ஒரு ஆலோசனை கூறி இருவரும் பிரிந்து சென்றார்கள். லோத்து தன் மாமிச கண்களால் செழிப்பான இடம் என்று சோதோமையும் கொமோராவையும் தெரிந்து கொண்டு, ஆபிராமை விட்டுப்பிரிந்து சென்றான்.
பிரிந்து சென்ற லோத்து சிறைபிடிக்கப்பட்டு கொண்டு போகப்பட்ட போது, ஆபிராம் அவன் சத்துருக்களை முறியடித்து, லோத்தையும் அவனுடைய பொருட்களையும், ஸ்திரிகளையும், ஜனங்களையும் திருப்பிக் கொண்டு வந்தான். சத்துருக்களை முறியடித்து வந்த ஆபிராமை, உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து, அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக, உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.
அருமையான தேவப்பிள்ளையே, அன்றே தசமபாகத்தைக் கர்த்தருக்குக் கொடுக்க வேண்டும் என்ற பண்பை ஆபிராம் உடையவனாய் இருந்தான். எல்லாவற்றிலும் என்று சொல்லும்போது, நாமும் நம்முடைய நேரம், சம்பாத்தியம், சரீர உழைப்பு, பேச்சு போன்ற எல்லாவற்றிலேயும் தசமபாகத்தைக் கொடுக்க கடனாளிகளாக இருக்கிறோம். என் வாழ்நாள் நீடித்திருப்பதற்காக இரட்சிக்கப்பட்டபின், ஒரு நாளின் தசமபாக நேரத்தை அவர் பாதத்தில் செலவிட ஆரம்பித்தேன். அதுவும் முதலாவது என்று உள்ளத்தில் தீர்மானம் செய்து இரவு 12 மணி முதல் இரண்டு மணி 24 நிமிடத்தைக் கர்த்தரின் நேரம் என்று செலவிட ஆரம்பித்தேன். புதிய நாளுக்காக நன்றி கூறி துதியினாலும், ஸ்தோத்திரத்தினாலும் அவரை மகிமைப்படுத்த ஆரம்பித்தேன். என்னுடன் என் மனைவியும் இணைந்து செயல்பட்டதால், கர்த்தரின் ஆவிக்குரிய வரங்கள் ஆகி ஆசீர்வாதமாக, எங்கள் வாழ்வில் பெருகிற்று. ஆபிராம் கர்த்தருடைய சிநேகிதனாக மாறியதற்கு, அவனில் காணப்பட்ட இந்த அன்பின் செயல் ஒரு காரணமாகும்.
இவ்விதமாக ஆசீர்வதிக்கப்பட்ட ஆபிராமுக்குப் பிள்ளையில்லை என்ற கவலையும் ஏக்கமும் இருந்ததைக் கர்த்தர் அறிந்து, ஆபிராமுக்குத் தரிசனமாகி, 'நீ பயப்படாதே, நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்' என்றார். இந்த வாக்குறுதியில் மூன்று காரியத்தைக் கர்த்தராகிய தேவன் ஆபிராமுக்குக் கூறியுள்ளார். ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக் கர்த்தனாய் இருக்கிறானே என்று தன் உள்ளத்தின் ஆதங்கத்தையே கூறினான். இன்று நம்மைக் காண்கிற தேவன் நமக்கும் இவ்விதமாக மூன்று காரியத்தை இந்த ஆண்டின் ஆசீர்வாதமாக வைத்திருக்கிறார்.
I. 'நீ பயப்படாதே'
இன்று பயமானது வேதனையான ஒரு காரியமாகும். பக்தனாகிய யோபு, 'நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது' என்று யோபு 3:25ல் கூறியுள்ளார். பயமானது கர்த்தரின் ஆசீர்வாதத்தைச் சுதந்தரிப்பதற்குத் தடையாக இருக்கிறது.
பயத்தால் கர்த்தரின் வார்த்தையில் உள்ள ஆசீர்வாதத்தை இழக்கிறோம்.
''காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில் ஆண்டவரே, என்னை ரட்சியும் என்று கூப்பிட்டான்." மத்தேயு 14:30
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சீஷர்களைத் தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார். அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம் பண்ணி ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார். அதற்குள்ளாக படவு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் அலைவுபட்டது. அந்தச் சமயத்தில் இயேசு கிறிஸ்து கடலின் மேல் நடந்து அவர்களிடத்திற்கு வந்தார். அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள். இயேசு கிறிஸ்து பயப்படாதிருங்கள், நான் தான் என்று திடப்படுத்தினார். உடனே பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே நீரேயானால் நானும் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வர கட்டளையிடும் என்றான். இயேசு கிறிஸ்து 'வா' என்றார். பேதுரு படவை விட்டிறங்கி இயேசுவினிடத்தில் போக ஜலத்தின் மேல் நடந்தான். இவ்வாறு கடலின்மேல் நடந்த பேதுரு, காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்தான். அதினால் அவன் அமிழ்ந்து போகையில் இயேசு கிறிஸ்துவே, என்னை ரட்சியும் என்று கூப்பிட்டான். இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.
வாழ்க்கையில் நாம் கர்த்தரின் ஆசீர்வாதமான வார்த்தையைப் பெற்று, அவ்வார்த்தையின்படி வாழும் போது, பலவிதமான எண்ணங்கள், போராட்டங்கள் நம் வாழ்வில் உருவாகிவிடும். கர்த்தருடைய வார்த்தை நீதியானது, வல்லமையானது. கர்த்தரின் வார்த்தை மாறுவதில்லை என்பதை மறந்து விடுகிறோம். நம் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனையை, வியாதியை, போராட்டத்தை, கடன் தொல்லையை நினைத்து பயத்திற்கு அடிமையாகி விடுகிறோம். பயமானது பிசாசின் ஆயுதம். பயம் வரும்போது, நாம் கர்த்தரின் வார்த்தையின் வல்லமையை, ஆசீர்வாதத்தை, மேன்மையை இழந்து விடுகிறோம். அதே சமயத்தில் நம் விசுவாசம் குறைந்து விடுகிறது. அவர் நமக்கு என்ன சொல்லுகிறாரோ அப்படியே யாவற்றையும் செய்து முடிப்பார்.
பயமானது நம் வாழ்வில் கர்த்தரின் வார்த்தையினால் உண்டாகும் ஆசீர்வாதத்தை, மேன்மையைப் பறித்து விடுவதுடன், அவிசுவாசத்தை நம்மில் தோன்றச் செய்து விடும். அத்துடன் எதையுமே சந்தேகத்துடன் பார்க்கக்கூடிய உள்ளத்தை உருவாக்கிவிடும். நீ பயப்படாதே, என்று வாக்குக் கொடுத்த கர்த்தர், நம் பயத்தை நீக்க வல்லவராக இருக்கிறார்.
பயம் நீங்க நாம் என்ன செய்ய வேண்டும்?
1) கர்த்தரைத் தேட வேண்டும்
''நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்." சங்கீதம் 34:4
நாம் இவ்வுலக வாழ்வில் எதை எதையோ விரும்பின வண்ணம் தேடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் நாம் எதை முதலாவது செய்ய வேண்டும் என்ற கர்த்தருடைய வார்த்தைக்குச் செவிகொடாது செயல்பட்டு வருகிறோம். ஆனால் கர்த்தரைத் தேடும்போது பயம் நீங்குவதுடன் ஒரு நன்மையும் குறைவுபடாது. ...கர்த்தரைத் தேடுகிறவர் களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது' என்ற சங். 34:10ன் வாக்கின்படி உங்களைக் குறைவில்லாத வாழ்வு வாழ வழி நடத்துவார்.அத்துடன் 'கர்த்தாவே , உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை ' என்ற சங்.9:10ன் படி கர்த்தரைத் தேடும்போது கைவிடாதிருப்பார்.
ஒருமுறை சகோதரி ஒருவர் எனக்கு வேலை கிடையில் வேலை இல்லை. இன்னும் சில தினங்களில் எனக்கு நீந்த ஊடுடைக்கவில்லை என்றால் இந்த நாட்டை விட்டு நான் என் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்றார்கள். அவர்களுக்கு ஆலோசனையாக அந்த வசனத்தைச் சொல்லி உமா டுனேன். அ கர்த்தர் மூன்று நாளைக்குள் அற்புதம் செய்வார் என்று கூறினேன். அந்தச் சகோதரியும் உண்மையாய்க் கர்த்தரைத் தேடி சோம்படி கடிதம் வந்தது டுத்த ஒரு கம்பெனியிலிருந்து வேலையில் சேரும்படி கடிதம் வந்தது. கைவிடாத தேவன் இன்றும் அதிசயம் செய்வார்.
2)பயம் நீங்கி வாழ கர்த்தருக்குச் செவிகொடுக்கவேண்டும்
"எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பாள்.'' நீதிமொழிகள் 1:33
இன்று நாம் கர்த்தரின் வார்த்தைக்குச் செவிகொடுக்க வேண்டும். ஒருமுறை இலங்கை ஊழியத்தில் கொழும்பில் ஒரு போதகரைச் சந்தித்து ஊழியத் திட்டத்தைத் திட்டம் பண்ண ஒரு நேரத்தை ஒதுக்கியிருந்தோம். நான் கொழும்பை விட்டு 15 கி.மீ தள்ளி தங்கியிருந்தேன். ஊழியருடன் சந்தித்துப் பேசுவதற்குரிய நேரத்தில் செல்ல, நான் தங்கி இருந்த இடத்திலி ருந்து அவர் இருக்கும் இடத்திற்குப் பயணமாக வந்து கொண்டு இருந்தேன்.கர்த்தரின் ஆவியானவர் அங்குச் செல்லாதே, திரும்பிப் போ என்றார். ஆகவே வாகனத்தைத் திருப்பி தங்கியிருந்த இடத்திற்கே சென்றோம்.
நாங்கள் அந்த ஊழியருக்கு அதைத் தெரிவிக்க முயற்சித்தோம். சில மணி நேரம் போன் வேலை செய்யவில்லை. பின்பு அவரிடமிருந்து செய்தி வந்தது. அவர்கள் தங்கியிருக்கிற இடத்திலேயே இருக்கிறார்கள் என்றும், தங்கியிருக்கிற கட்டடத்தின் கீழ்ப்பகுதியில் குண்டு வெடித்து, அநேகர் மரித்துப் போய் விட்டார்கள் என்றும் கூறினார். கர்த்தரின் சத்தத்துக்குக் கீழ்ப்படியும்போது, சேதமின்றி பயப்படாமல் நாம் நம் காரியங்களைச் செய்ய முடியும்.
3) பயம் நீங்க கிறிஸ்துவிடம் அன்புகூர வேண்டும்
"அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்: பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல."1யோவான் 4:18
நம்மில் கிறிஸ்துவின் அன்பு நிறைவாகும்போது கிடைக்கும் ஆசீர்வாதம், பயம் நம்மை விட்டு நீங்கச் செய்வதாகும். தேவன் நம்மீது வைத்த அன்பினால் இயேசு கிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்தார். அவர் நம்முடைய பாவங்கள், சாபங்கள், பெலவீனங்கள் எல்லாவற்றையும் சிலுவையில் சுமந்து தீர்த்தார். நாம் தேவனோடே ஒப்புரவாக வேண்டும் என்று நம்மைப் பரிசுத்தப்படுத்த சிலுவையிலே நமக்காகப் பலியானார். நமக்குள் உண்டான நோய்களைத் தீர்க்கும்படியாக, தம் சரீரத்தில் காயங்களை ஏற்றார். அவர் தழும்புகளினால் நாம் குணமாகும் பாக்கியம் உண்டாயிற்று. சிலுவையில் வெற்றிச் சிறந்த இயேசு கிறிஸ்து, பிசாசின் தலையை நசுக்கி, பிசாசின் செய்கைகளை அழித்து, நமக்குப் பிசாசின்மேல் ஜெயம் கிடைக்க வழி திறந்தார். இந்த வல்லமையின் செயலால் நம்மை நித்திய ஆக்கினைக்கு விலக்கி மீட்ட செயலை நாம் அறியும் போது, உணரும் போது கிறிஸ்துவின் அன்பு நமக்குள் பெருகி பயத்தை முற்றிலும் புறம்பே தள்ளிவிடும்.
II) நான் உனக்குக் கேடகமாயிருக்கிறேன்
"...நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக் கிறேன் என்றார்." ஆதியாகமம் 15:1
கேடகம் என்பது நம்மைப் பாதுகாக்கும் ஒரு ஆயுதமாகும். யுத்த காலத்தில் சத்துருவின் அம்புகள் நம்மை வீழ்த்தி விடாதிருக்கும்படி ஒரு பாதுகாக்கும் ஆயுதமாகும். வானமண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. இந்த யுத்தத்தில் 'பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்' என்று எபேசியர் 6:16 ல் நாம் பார்க்கிறோம். தாவீது தன் வாழ்வில் கர்த்தரே என் கேடகம் என்று 2சாமு. 22:3 ல் கூறுவதைப் பார்க்கிறோம். என்னைச் சத்துருவின் வல்லடிக்கு நீங்கலாக்கி இரட்சிக்கிறவர் அவரே என்றான்.
இன்று யாருக்குக் கர்த்தர் கேடகமாவார்?
1) கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களுக்குக் கேடகமாவார்
"நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்." சங்கீதம் 33:20
இன்று யாரெல்லாம் கர்த்தருக்குக் காத்திருக்கிறார்களோ அவர்களுக்கு அவர் துணையும் கேடகமுமாயிருக்கிறார். நாம் ¡ அவருக்காக காத்திருக்கும்போது புதுப்பெலனைத் தருகின்ற தேவன், - நமக்கு உன்னத பெலனைத் தருகின்ற தேவன், நமக்கு உன்னத பாதுகாவலாக இருப்பார். சங்கீதம் 27:14 ல் தாவீது, 'கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திட மனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு' என்கிறார். ஆபகூக் 2:3 ல் 'குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பறோம். நிச்சயமாக திருப்பதற்குக் நிபறிய ஆலோசனையைப் பார்து, உன்னைப் பெருகவே உன்ை ஆசிர்வதிக்கவே ஆசிர்வதித்டியே பண்ணுவேன் என்றார். அந்தப்படியே அவன் (ஆபிரகாம்) பொறுமையாய்க் காத்திருந்து வாக்குத்தத்தம்பம். என்று எபிரெயர் 6:14,15 ல் பார்க்கிறோம். எதையும் துரிதமாய் பெற வேண்டும் என்ற உள்ளமும், தாகமும் மிகுதியாக உடையவர்களாய் வாழ்ந்து கொண்டு இருக்கும் இக்காலத்தில் காத்திருப்பது சற்று போராட்டமான காரியமாக இருக்கிறது. கர்த்தராகிய தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதி 25 *ஆண்டுகள் கழித்து நிறைவேறியது. இன்று நாமும் கர்த்தருக்குக் காத்திருப்போம். அவர் நம் கேடகமாயிருந்துநம்மைக் காப்பார்.
2. கர்த்தரின் செட்டைகளின் கீழ் அடைக்கலம் புகுந்த வர்களுக்குக் கேடகமாவார்
"அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்" சங்கீதம் 91:4
யார் யார் கர்த்தரைத் தங்களைப் பாதுகாக்க வல்லவர் என்று ஏற்றுக் கொள்ளுகிறார்களோ அவர்களின் வாழ்வில் கர்த்தர் கேடகமாவார். கர்த்தர் நமக்கு உயர்ந்த அடைக்கலமாக இருக்கிறார். கிருபையினாலே ‘மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்' என்று சங்கீதம் 36:7 ல் பார்க்கிறோம். சங்கீதம் 17:9ல் 'என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்து கொள்ளுகிற என் பிராணப் பகைஞருக்கும் மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.' என்று சொல்வதைப் பார்க்கிறோம். கர்த்தருடைய 'செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும் என்று மல்கியா 4:2 ல் நாம் பார்க்க முடிகிறது. நம்மை அவர் செட்டைகளின் கீழ் வைத்துக்கொள்ள அழைக்கிறார். கோழி தன் குஞ்சுகளைச் செட்டைகளின் கீழ்க் காப்பதற்கு அழைக்கிறதுபோல, வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே என்னிடத்தில் வாருங்கள் என்று அழைக்கிற கர்த்தரிடத்தில் நம்மை ஒப்புக் கொடுப்போம். அவர் நமக்குக் கேடகமாவார்.
3) இரட்சிக்கப்பட்ட ஜனத்திற்குக் கர்த்தர் கேடகமாவார்
"இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே.." உபாகமம் 33:29
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்குப் பாவிகளை இரட்சிக்க வந்தார். அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்' என்று மத். 1.21ம் வசனத்தில் பார்க்க முடிகிறது. பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும்,நோயிலிருந்தும் நம்மை மீட்டு எடுப்பது ரட்சிப்பின் செயலாகும். இன்னும் பிசாசின் பிடியிலிருந்து நம்மை விடுதலையாக்கி, சமாதானத்தினால் நிறைத்து ஆசீர்வதிக்கிறவர் இயேசு கிறிஸ்து தான். உலக இரட்சகராகிய இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அப்போஸ்தலனாகிய பவுல், 1 தீமோத்.1:15ல் "பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது...' என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய் கிறிஸ்துவாகிய உலக இரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்று சமாரியா நாட்டினர் கூறினதைப் பார்க்கிறோம். இயேசு கிறிஸ்து நம்மை இரட்சிக்கிறவர். அவரின் இரட்சிப்பைப் பெற்றவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார்.
III. மகா பெரிய பலனுமாயிருக்கிறார்
"...உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்..." ஆதியாகமம் 15:1
இன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒவ்வொரு செய்கைகளையும் கவனித்து வருகிறார். அவர் நம்முடைய இருதயத்தைக் காண்கிறவர். அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்க மாயுமிருக்கிறது' என்று எபி. 4:13ல் சொல்லப்பட்டிருக்கிறது. 'காதை உண்டாக்கினவர் கேளாரோ ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ?” என்று சங். 94:9ல் பார்க்கிறோம். இவ்வாறு காண்கிற, கேட்கிற அன்பின் தேவன் நமது ஒவ்வொரு செய்கைக்கும் தக்கதாக பலனளிக்கிறார்.
யாருடைய வாழ்வில் கர்த்தரின் பலன் பெருகும்/கிடைக்கும்?
1) கர்த்தருக்காக பாடுகளைச் சகிக்கும்போது
"என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்..." மத்தேயு 5:11,12
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நாம் தரித்து வாழ்வதாலும், சுவிசேஷப்பணியைச் செய்வதாலும் நிந்தைகள் நிறைவாய் வரும். இந்த நிந்தைகளைக் குறித்து கலங்க வேண்டாம். "நம்முடைய கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, • தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்" என்று ஏசாயா 25:8ல் பார்க்கிறோம்.
முதல்முறையாக சிங்கப்பூர் ஊழியங்களைச் செய்ய சென்றபோது, ஒரு குடும்பத்தைச் சந்திக்க ஒரு சகோதரர் விலாசம் கொடுத்திருந்தார். நானும் என்னுடன் வந்த என் சகோதரியின் கணவனும் நாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து அவர் வீட்டைத் தேடிச் சென்றோம். அவரோ ஒய்வு பெற்றவர், அரசாங்க அதிகாரி. அவர் மனைவியோ அதிகமாக ஊழியம் செய்கிறவர். எதற்கு வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். ஏழுதினம் இப்பகுதியில் ஊழியம் செய்ய வந்தோம் என்றோம். உட்காரச் சொல்லவில்லை. எதற்கு ஊழியம் செய்ய வருகிறீர்கள், காசு கிடைக்கும் என்றா ? என்ற பல வேதனையான வார்த்தையினால் மிகுந்த சஞ்சலமடைந்தோம். நான் நின்றுகொண்டே அவர்களிடம் ஒரு ஜெபம் செய்து விட்டு போகிறோம் என்றேன். ஜெபித்தபோது, அந்தக் குடும்பத்தின் கஷ்டங்கள் பிள்ளைகளில் வந்த பாடுகள், போராட்டங்களையும் கர்த்தர் வெளிப்படுத்தி, என்னை ஜெபத்தில் நடத்தினார். தாங்கமுடியாத நிலையில் ஓய்வு பெற்ற சகோதரரும், சகோதரியும் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்கள். ஜெபத்தை முடித்து விட்டு என்ன செய்வது என்று தெரியவில்லை. போய் வருகிறோம் என்று விரைவாக அந்த வீட்டை விட்டு வெளியே சென்று நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குச் சென்றோம். என்ன அதிர்ச்சியாக இருக்கிறதே என்று பேசிக்கொண்டோம். திடீரென எங்கள் அறைக்குப் போன் வந்தது. அந்த வீட்டின் சகோதரர் மன்னித்துக் கொள்ளுங்கள், புரியாது தவறாது பேசிவிட்டோம் என்றார். அந்தச் சகோதரி அத்தனை நாட்களுக்கும் கூட்டங்களை ஒழுங்கு செய்து கொடுத்தார்கள். நிந்தையைக் கர்த்தர் நீக்கினார்.
2) அறைவீட்டில் பிரவேசித்து ஜெபம்பண்ணும்போது பலன் கிடைக்கும்
"நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்." மத்தேயு 6:6
மற்றவர் காணும்படியான ஜெபமல்ல,தேவன் விரும்புகிற வண்ணமாய் நாம் ஜெபிக்கும்போது, அதின் பலனையடைவோம். தாவீது சங். 30:10, 11ல் தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து கெஞ்சிய போது, கர்த்தர் அவன் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினார் என்று சாட்சியிடுவதைப் பார்க்கிறோம். 1 சாமு. 1ம் அதிகாரத்தில் அன்னாள் மிகவும் அழுது கர்த்தருடைய சந்நிதியில் தன் இருதயத்தை ஊற்றிவிட்டதைப் பார்க்கிறோம். அதன் பலனை அன்னாள் அடைந்தாள். பிள்ளையில்லாதிருந்த அவளுக்குச் சாமுவேலைத் தவிர மூன்று குமாரர்களையும், இரண்டு குமாரத்திகளையும் கர்த்தர் கொடுத்தார். கர்த்தர் விரும்பினவிதமான ஜெபம் மிகுந்த பலனைத்தரும்.
3) கர்த்தருடைய நாமத்தைத் தரித்த பிள்ளைகளுக்கு உதவி செய்யும்போது பலன் அளிப்பார்
"சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்." மத்தேயு 10:42
இயேசு கிறிஸ்துவை உண்மையாய்ப் பின்பற்றிச் செல்லும் மக்களுக்கு நாம் செய்யும் உதவி கர்த்தருடைய கணக்கில் இருக்கிறது. செய்யும் உதவி அற்பசொற்பமாய் இருந்தாலும் அதற்குரிய பிரதிபலன் மிகுதியாக இருக்கும்.
ஒருமுறை ஒரு விதவைத்தாய் தன் மகளுக்கு ஆசிரியப் பயிற்சி பள்ளியில் இடம் கிடைக்க ஜெபிக்கக் கேட்டுக் கொண்டார்கள். எந்த வசதியும் வருமானமும் இல்லாத ஒரு சகோதரி. இடம் கிடைத்தவுடன் சந்தோஷமாக தன் மகளையும் அழைத்துக்கொண்டு என் வீட்டுக்கு வந்தார்கள். அன்று ஜெபதொனி பத்திரிக்கைக்கு ஸ்டாம் ஒட்டி போஸ்ட் பண்ண வேண்டும். ஸ்டாம்ப் வாங்க ரூபாய் 4000 தேவை. என்னிடத்தில் ரூபாய் 400 தான் இருந்தது. அந்தச் சகோதரி இடம் கிடைத்த செய்தியைக் கூறிய பின் இன்றே பீஸ் கட்ட வேண்டும், ரூபாய் 400 தேவை என்றார்கள். என உள் மனதில் கர்த்தாவே இருப்பது 400 ரூபாய் தான். ஜெபதொனி பத்திரிக்கை அனுப்ப ரூபாய் 4000 தேவை என்ன செய்வது என்று ஜெபித்தேன். ரூபாய் 400ஐ அந்த விதவை சகோதரியிடம் கொடுத்து விடு என்றார். இந்த ஊழியம் உம்முடையது கர்த்தாவே, என்று என்னிடம் இருந்த பணத்தைக் கொடுத்து அவர்களை அனுப்பி விட்டேன். மிகுந்த சந்தோஷத்துடன் சென்றார்கள். அச்சமயத்தில் ஆபீசில் பணிபுரிந்த சகோதரர் ஒருவர் வந்து, அண்ணே, ஸ்டாம்ப் வாங்க போக வேண்டும். காசு கொடுங்கள் என்றார். இன்னும் ஒரு மணி நேரம் கழித்து வாருங்கள் என்று அனுப்பிவிட்டேன். ஊழியத்தில் உள்ள ஒரு சகோதரர் என்னைச் சந்திக்க வந்தார். சகோதரரே, என் மனைவி நடத்துகிற சிறிய ஆஸ்பத்திரியில் பிள்ளைபேற்றுக்கு சில நாட்களாக யாரும் வரவில்லை. இனி முதலாவது வரும் பேசன்ட் தரும் பீஸ் பணத்தை ஜெபதொனிக்குக் காணிக்கையாக கொடுக்கிறேன் என்று பொருத்தனை ஜெபம் செய்திருந்தார்கள். நேற்றையதினம் ஒருவர் பிரசவத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் கொடுத்த பீஸ் பணத்தைக் கொடுக்கச் சொல்லி தந்தார்கள். நான் மறந்து விட்டேன் என்றார். சீக்கிரம் அந்த ரூயாய் 4000 பணத்தை எடுங்கள் என்றேன். அவருக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. இதுவும் வெளிப்படுமா ? என்றார். இல்லை எனக்குத் தேவை அவ்வளவு என்றேன். சரியாக ரூபாய் 4000 கொடுத்தார்கள்.
ஆம் அருமையான சகோதரனே, சகோதரியே கர்த்தருக்காக நாம் கர்த்தருடைய நாமத்தில் செய்கிற சகல செய்கைகளையும் அங்கிகரித்து பிரதிபலனாகப் பெருகச் செய்து ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவின் பணியில்,
சகோ.C. எபனேசர் பால்.