"கண்மணியைப்போல என்னைக் காத்தருளும்.''
                                                                                                                                                                  
சங்கீதம் 17:8

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய  நாமத்தில் வாழ்த்துகிறேன்.

தாவீது தன்னுடைய  நெருக்கமான நேரத்தில் தேவ சமுகத்தை நோக்கி விண்ணப்பம் செய்கிறவனாக இருந்தான். தான் வாழ்ந்து  கொண்டிருந்த சூழ்நிலையில் எங்கு தன் வாழ்க்கையில் பாதிப்படைந்து விடுவேனோ என்று கலங்கினான். அப்போதெல்லாம்  தன் விண்ணப்பத்தைக் கர்த்தரின் சமுகத்தில் தெரிவித்தான். என்னைக் காக்க வல்லவர் அவர் ஒருவர்தான் என்று அறிந்து, புரிந்து, உணர்ந்து, கண்மணியைப்போல என்னைக் காத்தருளும் என்று தான் பாடின சங்கீதங்களில் குறிப்பிட்டுள்ளதைக் காணமுடிகிறது.

மனிதன் தன்னையும்  தன் குடும்பத்தையும் தனக்குண்டான எல்லாவற்றையும் காப்பதற்கு, முழுமனதுடன் முயற்சித்துக் கொண்டிருக்கிறான். தாய்க்கோழி தன் குஞ்சுகளைத் தன்னிடமாக அழைத்துப் பாதுகாப்பது போல நம்முடைய கர்த்தரும், இரட்சகரும், மீட்பருமான இயேசு கிறிஸ்து, ஒவ்வொருவரையும் தம்மிடம் அழைத்துக் கொண்டே இருக்கிறார். இன்று   அவர் சத்தத்தை அசட்டை செய்து விட்டு, நம் சுய நீதியால் பாதுகாவலைத் தேடிக் கொண்டிருக்கிறோம். இதற்காக   மனிதன் தன் சரீரத்தைப்  பலவிதமான பயிற்சிக்குட்படுத்துகிறான். தான் கற்றுக் கொண்ட பாதுகாவல்  முறையினால் எல்லாச் சூழ்நிலையிலும் சமாளித்துவிடுவேன் என்று எண்ணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்.

புறா வளர்க்கும்  நண்பர் ஒருவர் அதிகமாக சிலம்பாடுவதில் மிகுந்த திறமையுடையவராக இருந்தார். அவரது தடிக்கம்பைச் சுழற்றி வேகமாக எதிர்ப்பவரை அடித்து மடக்கி விடுவார். அவர் கம்பைச் சுழற்றிச் சண்டை செய்யும்போது, கல்லை அவர் பக்கமாக எரிந்தாலும் அந்தக்கல் கம்பிலே அடிபட்டு வெளியே விழுந்து விடும். ஆனால் அவர் ஒரு நாயை வளர்த்து வந்தார். அந்த நாய்க்குப் பிஸ்கட் வாங்கிக் கொடுத்தபோது, அவர் சுண்டு விரலை அது கவ்வி விட்டது. சில நாட்களிலேயே அவரின் வாழ்க்கை பரிதாபமாக மாறியது. நாய்க்கடியின் விஷம் அவரைத் தாக்கியதால் மரித்துப்போனார். என்ன தான் சரீரத்திற்கு ஏற்ற பயிற்சி கொடுத்திருந்தாலும், அது கர்த்தரின் வல்லமைக்கும், பாதுகாவலுக்கும் ஈடாகாது. அவரின் பாதுகாக்கும் வல்லமை நம்மை முழுமையாக காக்கக் கூடியது. அந்த அன்பின் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் மாறாதவர்.

I. எவைகளிலிருந்து நம்மைக் காக்கிறார்?

1. சீறுகிறவர்களுக்கு விலக்கிக் காக்கிறார்

"...அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்து சுகமாயிருக்கப் பண்ணுவேன்..." சங்கீதம் 12:5

இன்று  சமுதாயத்தில் மற்றவர்கள்மேல் சீறுகிற மக்களை அதிகமாக பார்க்கமுடிகிறது. தங்களுக்குப் பிடிக்காதவர்கள்மேல்  சீறுகிறார்கள். துன்மார்க்கனுடைய  செயல்களில் ஒன்று சீறுகிறதாய் இருக்கிறது. துன்மார்க்கன் 'தன் எதிராளிகளெல்லார்மேலும்  சீறுகிறான்.' என்று சங். 10:5ல் பார்க்க முடிகிறது. அவன் வாய் சபிப்பினாலும், கபடத்தினாலும், கொடுமையினாலும்  நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு. கிராமங்களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருந்து, மறைவிடங்களிலே  குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்ற வர்களைப் பிடிக்க அவன் கண்கள் நோக்கிக் கொண்டிருக்கிறது. இவ்விதமாய் சூனியங்களைச் செய்கிறவர்களின்  தந்திரமான, மந்திரங்களுக்குக் கர்த்தர் நம்மைக் காத்து நடத்துவார். பொறாமையினால், போட்டியினால், பெருமையினால்  இவ்விதமாக தவறான முறைகளைச் செய்கிறவர்கள் இன்று அதிகமாகப் பெருகியிருக்கிறார்கள். 'முகாந்தர மில்லாமல் எனக்காகத்  தங்கள் வலையைக் குழியில் ஒளித்து வைத்தார்கள்; முகாந்தரமில்லாமல் என் ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள்.' என்று சங். 35:7ல் பார்க்கிறோம். 'என் பிராணனை வாங்கத் தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்' என்று சங். 38:12ல் தாவீது பாடின சங்கீதத்தில் பார்க்க முடிகிறது.

ஒருமுறை  ஒரு கூட்டத்தில், மந்திரங்களைச் செய்யும் மனிதன், அவனில் இருந்த ஆவிகள் அவனை அலைக்கழித்தபடியால், கூட்டத்தின் முன் உருண்டு புரள ஆரம்பித்தான். அவனைப் பார்த்த கூட்டத்திலிருந்த மக்கள் எழுந்து வெளியே  ஓட ஆரம்பித்தனர். ஓடினவர்கள்  சிரமத்துடன் பயந்து வந்து, கூட்டத்தில் அமர்ந்தார்கள். வந்து விழுந்த மந்திரவாதியில்  இருந்த ஆவிகள் வெளியேறியவுடன், அவனது தீய செயலை நினைத்து மனஸ்தாபப்படத் தொடங்கினான். அவனில்  இருந்த ஆவிகளைக் கொண்டு குடும்பங்களில் சண்டைகளை உண்டாக்கி, பிரிவினையை ஏற்படுத்தி விடுவேன் என்று தன் சூனியத்தின் தீயசெயலைக் கூறினான். கடைக்காரர் அவன் விரும்பின பொருளை இலவசமாகத் தரவில்லை என்றால், அந்தக் கடைக்காரர் கடைக்கு யாரும் வரவே மனதில்லாத  நிலையை உண்டாக்கி விடுவானாம். அவனது சூனியத்தின்  செயல்கள் எல்லாமே கெடுதியைக் கொண்டு வரக்கூடியதாக இருந்தது.

இன்று நம்முடைய கர்த்தராகிய  இயேசு கிறிஸ்து இப்படிப்பட்ட சூனியங்களைச் செய்கிற மக்களின் தந்திரங்களுக்கு நம்மை விலக்கிப் பாதுகாத்து ஆசீர்வதிப்பார். மந்திரவாதியின்  செயல்களில் ஒன்று அநேகரின் வாழ்வின் கையின் பிரயாசங்களைக் கெடுப்பதாகும். தொழிலில், வியாபாரத்தில் நஷ்டம் உண்டாக்கி, தோல்வியையும், துக்கத்தையும் பெருகச் செய்வதால், ஏன் இந்த வாழ்வு என்று கலங்கும் நிலை உருவாகிவிடும். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, இவ்விதமாக நமக்கு விரோதமாக எழும்பும் சூனியத்தின் செயலை அதமாக்கி, நம்மைக் காத்து சுகமாயிருக்கச் செய்வார்.

2. பயத்தை நீக்கி காத்துக் கொள்வார்

"...சத்துருவால் வரும் பயத்தை நீக்கி, என் பிராணனைக் காத்தருளும்.'' சங்கீதம் 64:1

நமக்கு எதிரிடையாய்ச் செயல்படுகிற சத்துருவின் தந்திரம், நமக்குப் பயத்தை ஏற்படுத்துகிறது. பயமானது வேதனையுள்ளது என்று நாம் அறிவோம். சத்துருவாகிய பிசாசானவன் நமக்குள் அவனது தந்திரமான தீய செயல்களைச் செய்ய, முதலாவது நமக்குள் பயத்தைத் தோன்றச் செய்கிறான். நாம் பயப்படும்போது, பலவித தீய சிந்தனைகள், யூகங்கள் தோன்றி, நம் எண்ணங்களைக் கெடுத்து விடுகிறது. இதினால் கவலை, இனி என்ன செய்வது என்ற மனப்போராட்டங்களை நமக்குள் பெருகச் செய்து, இரவில் துாங்கமுடியாதபடி வேதனையான நிலையை உருவாக்கி விடுகிறது.

அடிக்கடி நான் ஒரு காரியத்தைச் சொல்லுவதுண்டு. பேதுரு கடலின் மேல் நடந்து வர அனுமதி பெற்றான். அழைப்பைப் பெற்றபின் கடலில் கொந்தளிப்பு நிறைந்திருந்த நேரத்தில் பெரிய விசுவாசத்துடன் படகை விட்டு, கர்த்தரின் வார்த்தையின் வல்லமையினால் கடல் நீரின் மேல் இறங்கி நடந்தான். அவனது பார்வை எழும்பின அைைலயைப் பார்த்தபோது, பயம் வந்தது. அவன் கடல் நீரில் நடந்து கொண்டிருந்த மேன்மையை இழந்து, தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தான். ஆனாலும் அவன் இயேசு கிறிஸ்துவை நோக்கிக் கூப்பிட்டபடியால், இயேசு கிறிஸ்து அவன் கையைப் பிடித்து துாக்கினார். அவனின் பெரிய விசுவாசம் அற்ப விசுவாசமாக மாறியது. கர்த்தரின் வார்த்தையில் இருந்த வல்லமையை சந்தேகப்பட தொடங்கினான். பயத்தினால் அவன் கடல் நீரின்மேல் நடந்து கொண்டிருந்த சிலாக்கியத்தை இழந்தான்.

பயப்படும்போது நாம் அஞ்சுகிற காரியங்கள் நடைபெற்று விடும். யோபு 3:25ல் 'நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது' என்று சொல்வதைப் பார்க்கிறோம். தன் வாழ்வில் பயந்ததினால் வந்த அனுபவ சாட்சியைப் பகிர்ந்து கொண்டதைப் பார்க்க முடிகிறது. 'வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.' என்று லூக்கா 21:26ல் இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தைகளைப் பார்க்கிறோம். நம் வாழ்வில் எந்த விதத்தில் நமக்குப் பயம் வந்தாலும், அது வேதனையானது. இன்று இருள் நிறைந்த வாழ்வு, தனிமை, யாரும் எனக்கு இல்லை என்ற போராட்டமான, வேதனையான சூழ்நிலைகளில் உண்டாகும் எல்லாப் பயத்தையும் கர்த்தாதி கர்த்தர் நம்மை விட்டு நீக்கி, தைரியத்தை நிறைவாய்த் தந்து பயத்தால் வரும் பாடுகளுக்கு விலக்கி நம்மைக் காத்துக் கொள்வார். சங். 138:3ல் உள்ளதுபோல, நம் ஜெபத்தைக் கேட்டு ஆத்துமாவிலே பெலன் தந்து, நம்மைத் தைரியப்படுத்துவார். எபி. 10:20ன் படி இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் நமக்குள் தைரியம் உண்டாகிறது. அப். 4:13ல் படிப்பறி வில்லாத பேதுருவும் யோவானும் மிகுந்த தைரியமாய் இயேசு கிறிஸ்துவை அறிக்கை செய்தார்கள். காரணம் - அவர்கள் இயேசு கிறிஸ்துவுடன் இருந்த படியால்.

3. தீங்குக்கு விலக்கிக் காப்பார்

"கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்." சங்கீதம் 121:7

தீங்கு செய்யும் மனிதர்கள் பலர் உண்டு. அதைப் போல தீங்கு செய்யும் துாதர்களும், தீங்கு செய்யும் தீய ஆவிகளும் உண்டு. தீங்கு செய்கிற மக்கள் தங்களது உள்ளத்தில் தோன்றுகிற பெருமை, வெறுமை இவைகளினால் தீங்கு செய்ய திட்டமிட்டு, வேதனைப்படுத்தி, துக்கப்படுத்தி, வாழ்வில் கசப்பைப் பெருகச் செய்கிறார்கள். சில சமயம் நாம் புதிய இடங்களை வாங்கும்போது, அதின் தீட்டான காரியங்கள் தீங்கைக் கொண்டு வந்து விடுகிறது.

ஒரு குடும்பத்தார் செத்துப்போன குழந்தையின் சடலத்தை, அவர்கள் வீட்டிலேயே புதைத்து விட்டார்கள். அதினால் அந்த வீட்டில் பல போராட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற ஆரம்பித்தது. வாகன விபத்தும், மரணமும் அந்த வீட்டுக்குச் சென்று வருபவரின் குடும்பங்களில் நடைபெற்றது. ஆம், நாம் தீட்டான இடங்களுக்குச் செல்லும்போது, தீங்கு தோன்றி விடுகிறது. மீகா 2:10ல் 'எழுந்திருந்து போங்கள்; இது நீங்கள் இளைப்பாறும் இடம் அல்ல. இது தீட்டுப்பட்டது, இது உங்களை நாசப்படுத்தும், அந்த நாசம் மிகவும் கொடியதாயிருக்கும்.'என்று சொல்லியிருக்கிறபடி தீட்டான இடத்திற்கு site seeing, picnic என்று செல்லுவதால், நம் வாழ்வில் தீங்கு தோன்றி, நம்மை மிகவும் துக்கப்படுத்துகிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒத்தாசையை, உதவியைப் பெற, நாம் அவர் சமுகத்தை நோக்கிப்பார்க்கும் போது, அன்பின் தேவன், சகலத்தையும் சிருஷ்டித்தவர், சேதமின்றி நம்மைக் கண்மணியைப் போல் காத்துக் கொள்வார். அவரை நோக்கிப் பார்த்தவர்கள் பிரகாசமடைந்தார்கள், அவர்கள் முகங்கள் வெட்கப்பட வில்லை என்ற வார்த்தையின்படி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எல்லாத் தீங்குக்கும் நம்மை விலக்கிக் காத்து சுகமாய் வாழச் செய்வார்.

4. இருதயத்தையும், சிந்தையையும் காப்பார்

"அப்பொழுது எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக் குள்ளாகக் காத்துக்கொள்ளும்." பிலிப்பியர் 4:7

இன்று நம்முடைய இருதயமும் சிந்தைகளும் காக்கப்பட வேண்டியது மிகுந்த அவசியமாயிருக்கிறது. 'மனுஷருடைய இருதயத்திற் குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும், புறப்பட்டுவரும்.' என்று மாற்கு 7:21, 22ல் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.' என்று நீதி. 4:23ல் சொல்லப்பட்டிருக்கிறது. 'எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது' என்று எரே. 17:9ல் பார்க்கிறோம். நம் இருதயத்தை நம் தேவன் ஆராய்கிறவரும், உள்ளிந்திரியங்களைச் சோதிக்கிறவருமாயிருக்கிறார். 'மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்று 1 சாமு.16:7ல் பார்க்கிறோம். உன் இருதயத்தில் உள்ள தீதான எண்ணங்களை, தவறான காரியங்களை, இன்னும் தேவன் விரும்பாத அக்கிரம சிந்தைகளைக் கர்த்தர் காண்கிறவராக இருக்கிறார்.

இன்னும் இந்த உலகில் கர்த்தர் நம்மை அவரைத் துதிப்பதற்கு ஏற்படுத்தியிருக்கிறார். துதிப்பதற்குரிய காரியத்தை நாம் செய்யாது இருக்கும்போது, பலவிதமான கேடான காரியங்களையும் நாம் சந்திக்க நேரிடும். 'அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப் படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.' என்று ரோமர் 1:21ல் பார்க்கிறோம். இவ்விதமான மக்களில், தேவன் அவர்களை இழிவான இச்சை ரோகங்களுக்கு ஒப்புக் கொடுத்தார்.' என்று நாம் அறிய முடிகிறது. 'தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்' என்று ரோமர் 1:28ல் பார்க்கிறோம். இன்றே தீர்மானம் செய்து, தேவனைத் துதிப்போம், மகிமைப்படுத்துவோம். அவரை அறிகிற அறிவிலே வளருவோமாக.

அத்துடன் நமக்குள் அக்கிரம சிந்தை இருக்குமானால் கர்த்தர் நம் ஜெபத்தைக் கேட்கமாட்டார் என்று சங். 66:18ல் காண முடிகிறது. இன்றே நாம் கிறிஸ்து இயேசுவின் சிந்தையுடையவர்களாக மாறுவோம். கைவிடாத தேவன், கைவிடாது காப்பார். எல்லாப்புத்திக்கும் மேலான தேவ சமாதானம் நம் இருதயங்களையும் சிந்தைகளையும் காப்பதற்காக, நம் எல்லாக் காரியங்களையும் ஸ்தோத்திரத்துடன் கர்த்தருக்கே தெரியப்படுத்துவோமாக.

இன்று நம்மைச் சீறுகிற சூனியக்காரரின் தந்திரமான மந்திரங்களுக்கும், தீமைக்கும் விலக்கிக் காக்கும் தேவன் இன்றும் ஜீவிக்கிறார். நம்மை எல்லாப் பயத்துக்கும் நீங்கலாக்கி காத்து, தீங்கு நம்மைத் துக்கப்படுத்தாதபடி நம் எல்லையில் நலமானதைச் செய்து, நம் இருதயத்தையும், சிந்தையையும் தேவசமாதானத்தினால் நிறைத்து, அனுதினமும் நம்மைக் காத்து, தம் திட்டப்படி, சித்தப்படி நடத்துவார். அவர் நமக்கு என்னென்ன சொன்னாரோ, அந்தப்படியே நம்மை ஆசீர்வதிப்பார்.

II. அன்பின், வல்லமையின் தேவன் யாரைக் காப்பார்?

1.உறுதியாக தம்மை நம்பியிருக்கிறவர்களைக் காப்பார் "உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.” ஏசாயா 26:3

கிறிஸ்து இயேசுவை முழுமையாக நம்பி அவரையே சார்ந்து ஜீவிக்க நம் வாழ்வில் இடம் கொடுக்கும்போது, அவரை நம்புகிற மனதையுடைய வர்களை, முழுமையான சமாதானத்துடன் காத்துக் கொள்வார். காக்கப்படுவதோடு, சமாதானம் நம் எல்லைகளில் நிறைந்து விடும். சமாதானம் இல்லாதபடியால் மிகுந்த கவலையும், பல காரியங்களைச் சிந்தித்துக் கொண்டு, இரவிலும் சரியாக துாங்க முடியாது, துக்கத்துடன் வாழும் மக்கள் இன்று ஏராளம் உண்டு. அத்துடன் கோபமும், எரிச்சலும் அடைந்து, வீட்டாருடன் உள்ள நல்ல உறவை இழந்து போகிறார்கள். சிலர் வேலை செய்யும் இடத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போல் தங்களின் எரிச்சலை, கசப்பை வெளிப்படுத்தி அவர்களுடன் பணி செய்வோரையும் துக்கப்படுத்துகிறார்கள். இவ்வாறு தங்கள் முகரூபத்தை மாற்றிக்கொண்டு, தகாத வார்த்தைகளைக் கொண்டு பிள்ளைகளுடன் பேசுவதினால், பிள்ளைகள் கோபப்படுவதுடன் கீழ்ப்படியாது வாழ நம்மை கர்த்தரின் ஊழியத்தைச் செய்ய நம்மை நெருக்கி ஏவும் என்று 2 கொரி. 5:14ல் பார்க்க முடிகிறது. இந்தக் கிறிஸ்துவின் அன்பு நமக்குள் பெருகும்போது, கர்த்தர் அருளின அன்பின் தாலந்துகளின் மூலம், அநேகரின் வாழ்வை மாற்றக்கூடியதாக, விடுவிக்கக்கூடியதாக செயல்படும். இந்த அன்பின் பெரிதான செயலினால் அநேக ஆத்துமாக்களைக் கிறிஸ்துவுக்கு ஆதாயப்படுத்தி விடுவோம்.

 

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

 

கிறிஸ்துவின் பணியில், சகோ. C. எபனேசர் பால்.ஆரம்பிக்கிறார்கள்

அருமையான சகோதரனே, சகோதரியே, சமாதானத்தை இழந்து கவலை கண்ணீருடன் உன் வாழ்வு வேதனையாக இருக்கிறதா? உன் நிலைகளை ஆராய்ந்து அறிந்தவர், உன் காரியங்களை மாற்றி, உன் கண்ணீரைத் துடைத்து, மிகுந்த மகிழ்ச்சி நிறைந்த நல்வாழ்வைத் தர விரும்புகிறார். அவரை உறுதியாகப் பற்றிக்கொள்ள உன் மனதில் இன்றே, இப்பொழுதே தீர்மானம் செய்து, அவரை நம்பு. அதிசயமாய்ச் சகல காரியங்களும் சீராவதைக் காண்பாய். உன் சுகவாழ்வும் மலரும். உன் உடைந்த உள்ளம் பூரிப்பாகும். சோர்வுகள் நீங்கி, சந்தோஷமும் சம்பூரணமும் பெருகும். கர்த்தரின் கரம் உன்னைத் தாங்கி, காத்து நடத்துவதைக் காணவும் உணரவும் முடியும்.

2. உண்மையுள்ளவர்களைக் கர்த்தர் காப்பார்

"...உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்பு செய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்." சங்கீதம் 31:23

பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானது. உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். இவ்வுலக வாழ்வில் உண்மையுள்ள மனிதரைப் பார்ப்பது அரிதான காரியமாக இருக்கிறது. ஆனால் உண்மையுள்ள மனுஷர் பரிபூரண ஆசீர்வாதங்களைக் கர்த்தரிடமிருந்து பெறுவார்கள். கோபங்கொண்ட நேபுகாத்நேச்சார். உக்கிர கோபங்கொண்டு சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் அழைத்துக் கொண்டு வரும்படி கட்டளையிட்டான். ஏன் என்றால் இந்த நேபுகாத்நேச்சார் அறுபது முழ உயரமும், ஆறு முழ அகலமுமான பொற்சிலையைப் பண்ணுவித்து, சம பூமியில் நிறுத்தி எல்லோரையும் தாழ விழுந்து பணிந்து கொள்ளக் கூறினான். பணிந்து கொள்ளாதிருந்தீர்களேயாகில் அந்நேரமே அக்கினிச் சூழையின் நடுவில் போடப்படுவீர்கள் என்று கூறினான். இந்த மூன்று வாலிபரும் ஒரே மனதாய் நாங்கள் ஆராதிக்கும் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார் என்று கூறினார்கள். கோபமடைந்த நேபுகாத் நேச்சார் அக்கினிச் சூளையை ஏழு மடங்கு அதிகமாக சூடாக்கினான். இந்த மூன்று வாலிபரையும் கட்டி சூளையின் நடுவே போட்டார்கள். தூக்கிச் சென்றவர்கள், அக்கினிச் சூளை மிகவும் சூடாக்கப் பட்டிருந்ததால் கொல்லப்பட்டார்கள்.

கர்த்தரின் பிரசன்னம் இருந்தபடியால் கட்டுகள் நீக்கி, மூன்று வாலிபரும் சூளையின் நடுவே உலாவினார்கள். இதனைக் கண்ட நேபுகாத்நேச்சார் எரிகிற அக்கினி சூளையின் வாசலண்டை வந்து, உன்னதமான தேவனுடைய தாசர்களே வெளியே வாருங்கள் என்று அழைத்து, சோதித்தபோது, அக்கினி எந்த சேதத்தையும் அவர்களில் நடப்பிக்காததைக் கண்டு, இவர்களின் தேவனே மெய்யான தேவன் என்று பறைசாற்றினான். உண்மையாய் ஆராதித்த வாலிபரை அக்கினிக்கு விலக்கிக் காத்தார். தன் வேலையில் உண்மையாய் இருந்த தானியேலை சிங்கங்களின் வாய்க்கு விலக்கிக் காத்தார். உண்மையாய் இருந்த மோசே யை கர்த்தர் அதிகமாக மேன்மைப்படுத்தி காத்து நடத்தினார். உண்மையுள்ளவனைக் கர்த்தர் காத்து நடத்துகிறார். இன்று பேசுவதிலும், குடும்பத்தாரை நேசிப்பதிலும் உண்மையாய் இருப்போமாக. கர்த்தரைத் தேடுவதிலும், ஜெபிப்பதிலும், துதிப்பதிலும், உண்மையாக இருப்போமாக. கர்த்தர் நம்மை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காத்து நடத்துவார். ஆசீர்வதிப்பார்.

3. இஸ்ரவேலரைக் காக்கிறார்

இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை துாங்குகிறதுமில்லை.'' சங்கீதம் 121:4

இஸ்ரவேலைக் காக்கிற தேவன் என்று சொல்லியிருக்கிறது. இஸ்ரவேலர் என்றால் இஸ்ரவேல் நாட்டைச் சார்ந்தவர் களல்ல, தங்கள் வாழ்வில் மாற்றம் அடைந்தவர்களைக் குறிக்கிறது. யாக்கோபாக நம்மை சிருஷ்டித்தார். யாக்கோபு கண்கள் தெரியாத தகப்பனிடம், நான் தான் ஏசா என்று ஏமாற்றியவன். தன் சகோதரனிடம் அன்பு கூராதவன். அவன் சகோதரன் ஏசா மிகுந்த பசியாயிருந்த போது, தன்னிடம் இருந்த கூழிலே சாப்பிடத்தா என்று கேட்ட போது, யாக்கோபு உன் சேஷ்ட புத்திர பாகத்தை எனக்கு விற்றுப்போடு என்றான். ஏசா தன் மிகுதியான பசியால் வாடினபோது, சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்று யாக்கோபிடம் விற்றுப்போட்டான். சகோதர பாசமே இல்லாத இந்த யாக்கோபை, இஸ்ரவேலாக கர்த்தர் உருவாக்கினார். ஈசாக்கு, யாக்கோபை ஆசீர்வதித்தினிமித்தம் ஏசா தன் தகப்பன் மரணத்துக்குப் பின் அவனைக் கொன்று விடவேண்டும் என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொண்டான். ஏசாவின் வார்த்தைகள் ரெபேக்காளுக்கு அறிவிக்கப்பட்டது. ரெபேக்காள் இளையமகனாகிய யாக்கோபை அழைத்து, ஆரானில் உள்ள தன் சகோதரன் லாபானிடத்திற்கு ஓடிப்போ; உன் சகோதரன் கோபம் தணிந்தபின், ஆள் அனுப்பி உன்னை அழைத்துக்கொள்வேன் என்று கூறினாள். யாக்கோபை ஈசாக்கு ஆசீர்வதித்து, பதாம் அராமுக்கு ரெபேக்காளின் சகோதரன் வீட்டுக்கு அனுப்பி விட்டான்.

யாக்கோபு இருபது ஆண்டுகள் லாபானிடம் தங்கி, லாபானின் ஆடுகளை மேய்த்தான். அத்துடன் யாக்கோபு லாபானின் இரண்டு குமாரத்திகளையும் விவாகம் செய்து, ஒரு பெரிய கூட்டமாக மாறினான். அவன் மீண்டும் தன் சொந்த ஊருக்குத் திரும்பிய போது, எங்கு ஏசா தன் குடும்பத்தாரை அழித்து விடுவானோ என்று பயந்தான். தன் இரண்டு மனைவிகளையும், தன் இரண்டு பணிவிடைக்காரிகளையும், தன்னுடைய பதினொரு குமாரரையும் கூட்டிக்கொண்டு யாப்போக்கு என்ற ஆற்றின் துறையைக் கடந்தான். யாக்கோபு தனித்திருந்தான். அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடன் போராடி, அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவன் தொடைச்சந்தைத் தொட்டார். யாக்கோபு, நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப்போகவிடேன் என்றான். அவர் உன் பேர் என்ன என்று கேட்டார். யாக்கோபு என்றான். உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும். தேவனோடும் மனிதனோடும் போராடி மேற்கொண்டாயே என்றார். ஆம் இந்தக் குறை நிறைந்த யாக்கோபை தேவன் இஸ்ரவேலாக உருவாக்கினார். இந்த இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியமானது என்று எண். 24:1ல் பார்க்கிறோம். அத்துடன் இஸ்ரவேலைக் காப்பார் என்று சங். 121:4ல் பார்க்கிறோம்.

4. தம்மில் அன்பு கூருகிறவர்களைக் காப்பாற்றுகிறார்

"கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்." சங்கீதம் 145:20

இன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை யார் நேசிக்கிறார்களோ. அவரில் அன்பு கூருகிறார்களோ அவர்களைக் காக்கிறார். தேவன் நம்மீது அன்பு கூர்ந்து, இயேசு கிறிஸ்துவை நம் மீட்புக்காக இவ்வுலகத்திற்கு அனுப்பினார். கிறிஸ்து தன் அன்பை கல்வாரிச் சிலுவையில் வெளிப்படுத்தினார். அந்த அன்பினால் நாம் கிருபைக்குட்பட்டு நீர்மூலமாகாதிருக்கிறோம். நாம் அவரின் வார்த்தைகளைக் கைக் கொள்ளுவதினால், அவரில் அன்பு கூருகிறவர்களாக இருக்கிறோம். இந்த அன்பு ஒவ்வொரு நாளும் அதிகரிக்க அதிகரிக்க, கர்த்தரின் தாலந்துகளும், கிருபை வரங்களும் நமக்குள் பெருகிவிடும். இந்த அன்பு நம்மை கர்த்தரின் ஊழியத்தைச் செய்ய நம்மை நெருக்கி ஏவும் என்று 2 கொரி. 5:14ல் பார்க்க முடிகிறது. இந்தக் கிறிஸ்துவின் அன்பு நமக்குள் பெருகும்போது, கர்த்தர் அருளின அன்பின் தாலந்துகளின் மூலம், அநேகரின் வாழ்வை மாற்றக்கூடியதாக, விடுவிக்கக்கூடியதாக செயல்படும். இந்த அன்பின் பெரிதான செயலினால் அநேக ஆத்துமாக்களைக் கிறிஸ்துவுக்கு ஆதாயப்படுத்தி விடுவோம்.

                                                                                                      கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                                                                                                                                                                        கிறிஸ்துவின்பணியில்,

                                                                                                                                                                                                                                                         சகோ. C. எபனேசர்பால்.