"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்."

                                                                                                                                                           யோவான் 3:16

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

                   கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன். ஆதி மனிதனாகிய ஆதாமும் ஏவாளும் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் பாவம் செய்தபடியால் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே பிரிவினை உண்டாயிற்று. சாப்பிட வேண்டாம் எனக் கூறிய பழத்தை சாப்பிட்டபடியால் அவன் தேவனுடைய உறவை இழந்தான். பல வேதனைகளும் சாபங்களும்,பாடுகளும், மரணமும் அதனால் தோன்றின. தேவனின் மகிமையான சாயலை இழந்து அந்தகாரமும் கெடும் அடைந்தான். அதோடு மாத்திரமல்ல, தேவ சாயலாய் வாழ்ந்த அவன், அந்த சாயலினால் உண்டான மேன்மைகளையும் மகிமையானவைகளையும் நித்திய நல்வாழ்வையும் ஆசீர்வாதங்களையும் சுதந்தரத்தையும்  இழந்துப் போனான்.

           ஆகவே நம்மீது அன்புகூர்ந்த  தேவன், நாம் கெட்டுப்போகாமல் ஜீவனை அடைவதற்கு,தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை சத்திய வழியாக இவ்வுலகத்திற்கு அனுப்பினார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினால் தேவ  சாயலாய் வாழ்ந்த நம் வாழ்வில் இழந்து போன சகல ஆசீர்வாதங்களையும் திரும்பப் பெற்றுக்கொள்ளுகின்ற சிலாக்கியம் நமக்குக்  கிருபையாகக்  கிடைத்தது. மனிதன் இழந்து போன காரியங்கள் அநேகம் உண்டு. அந்த இழந்து போன்றவைகளில் சிலவற்றை பெறுவதற்கான வழிகளையும் முறைகளையும் செய்கை களையும் நாம் இந்த நாளில் அறிந்து கொள்வது நலமாய் இருக்கும். ஆகவே தான் லூக்கா 

19:10ல் இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்று பார்க்கிறோம்.

1.வஸ்திரத்தை இழந்து போனான்                                

               தேவன் ஆதியிலே ஏதேன் தோட்டத்திலே ஆதாமே நீ எங்கே இருக்கிறாய் என்று அழைத்த  அவர் சத்தத்தைக் கேட்ட ஆதாமும் ஏவாளும் நங்கள் நிர்வாணியாய் என்றுக்  கூறி ஒளித்துக் கொண்ட சம்பவத்தை ஆதி 3:10ல் பார்க்கிறோம். அவன் தேவனுடைய சாயலில் இருந்தபொழுது ஒளியின் வஸ்திரத்தை தரித்திருந்தான். ஆனால் அதை இழந்தபடியால் இருள் அவனை மேற்கொண்டது. ஒளியின் வஸ்திரத்தை இழந்து போனான். இழந்தவைகளில் முதலாவது அவரோடு இருந்த நல்ல உறவையும், ஒளியின் வஸ்திரத்தையும் இழந்து போனான். ஆகவே நிர்வாணியாக மாறினான்.

ஏன் வஸ்திரத்தை இழந்து போகிறோம் ?

1. பாவத்தினால்.

'' அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து ஒளித்துக்கொண்டேன் என்றான்."ஆதியாகமம் 3:10

கீழ்ப்படியாமையின் பாவமானது தேவனுக்கும் நமக்கும் தடுப்புச் சுவராக மாறினதோடு அவரின் சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட நம் வாழ்வில் ஒளியின் வஸ்திரத்தை இழந்து போக காரணமாயிற்று. சங்கீதம் 104:2 ல் ஒளியை வஸ்திரமாகத் தரித்திருக்கிற தேவன் என்று பார்க்க முடிகிறது.வெளிச்சம் இல்லாது இருள் வந்தபடியால் நாம் நிர்வாணிகளாய் மாறிவிட்டோம்.

                ஒரு முறை வயது முதிர்ந்த ஒரு தேவா ஊழியருக்காக நான் ஜெபிக்க அழைக்கப்பட்டிருந்தேன். வயதானவர்,மனைவி பிள்ளைகளாய் இருந்ததா ஒரு குடும்பம். தேவனுடைய வார்த்தையை மீறி தேவனுக்கு பிரியமில்லாத தவறான தீயதான காரியத்தைச் செய்தபடியால், அவர் மிகுந்த வேதனையோடு தவித்துக் கொண்டிருந்தார். எனக்கு வஸ்திரம் இல்லையே என்று மிகுந்த வேதனையோடு 

சொல்லிக்கொண்டிருந்தார். 5 வேஷ்டிகளை (உடுத்தும் உடையை ) உடுத்திருந்தும், மேற்கொண்டு எனக்கு வேஷ்டி வேண்டும் என்று தன மனைவியிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அவரது வாழ்க்கையிலே மென்மையான வல்லமையான ஊழியத்தைச் செய்தும், செய்த பாவத்தினால் இரட்சிப்பின் மேன்மையான வஸ்திரத்தை இழந்து போயிருப்பதைக் காணமுடிந்தது.

                 இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையும் அப்படித்தான். கிறிஸ்துவுடன் உள்ள வாழ்க்கையை நாம் இழந்து போகும் போது, நாம் நிர்வாணிகளாய் மாறி விடுகிறோம்.

2. பின்மாற்ற வாழ்க்கையினால் வஸ்திரத்தை இழந்து போகிறோம்.

"இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உ ரிந்துகொண்டு,அவனைக் காயப்படுத்தி,குற்றுயிராக விட்டுப் போனார்கள்." லூக்கா 10:30

              எருசலேம் என்பது தேவன் தங்குகிற  ஒரு ஸ்தலம். கர்த்தருக்கு பயந்து வாழ்கிறவர்கள்  எருசலேமின் வாழவைக்க காண்பார்கள் என்று சங்கீதம் 128:5ல் பார்க்க முடிகிறது.இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள், தங்கள் பிதாக்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்கு எருசலேமுக்கு வந்தார்கள்' என்று 2 நாலா 11:16ல் பார்க்க முடிகிறது. 'எருசலேம் இசை விணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது. அங்கே இஸ்ரவேலுக்கு சாட்சியாகக்  கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தை ஸ்தோத்தரிப்பதற்குப் போகும் ' என சங்கீதம் 122:3,4ல் பார்க்க முடிகிறது.இவ்விதமான மேன்மையான தூய வாழ்க்கை நடத்தக் கூடிய எருசலேமை விட்டு நூனின் குமாரனாகிய யோசுவாவின் மூலமாய் சபிக்கப்பட்ட எரிகோவை நோக்கிச் செல்லும் போது நம் வாழ்வில் பிசாசானவன் நம்மைக் காயப்படுத்தி குற்றுயிராய் விட்டுச் செல்வதோடு நம்முடைய மேன்மையான வஸ்திரத்தை உரிந்து விடுகிறான்.

3. ஆகாரமின்றி பிசாசுகளைத் துரத்துவதினால் 

          '' பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம் பண்ணி , அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள்.'' அப் 19:16.

               தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்தரவாதிகளாகிய யூதரின் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்ல துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில்  ஆணையிட்டு உங்களுக்கு கட்டளையிடுகிறோம் என்றார்கள். பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன்,பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, அவர்கள்மேல் பாய்ந்து. (அப் 19:13, 15). ஆகாரமின்றி துரத்தினபடியால் வஸ்திரத்தை இழந்து போனார்கள். நாம் விசுவாசமுள்ளவர்களாகி, இரட்சிப்படைந்த மக்களாய் இருக்கும் போது,' என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப்  பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களை சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்கள்மேல் கைகளை வைப்பார்கள்; அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்' மாற்கு 16:17,18ல் பார்க்கிறோம்.இவ்விதமான தகுதிகளை அடைந்து, பிசாசை எதிர்த்து நிற்க  வேண்டும். இல்லையானால் நாம் இரட்சிப்பின் வஸ்திரத்தை இழந்துபோய்  விடுவோம்.

யாருக்கு வஸ்திரம் தருகிறார்?

1. மனந்திரும்புகிறவர்களுக்கு

                    "அப்பொழுது தகப்பன் தன ஊழியக்காரரை நோக்கி:  நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து,இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்." லூக்கா 15:22.

                      தகப்பனின் சகோதரனின் ஐக்கியத்தையும், அன்பையும் விட்டு,தனக்குரிய பங்கைப் பிரித்துக் கொண்டு, தூரமான 

தேசத்திற்குச் சென்று துன்மார்க்கமாய் ஜீவனம் பண்ணி ஆஸ்தியை அழித்துப்  போட்ட போது, அவன். குறைவடைந்து, பசியினால்,நிறைந்து தன் ஆசை நிறைவாகாதவனாய் தவித்த வேளையிலே ஒருவரும் உதவிச் செய்யவில்லை என்று உணர்ந்து புத்தி தெளிந்த போது, தன தகப்பன் வீட்டை எண்ணினான். தகப்பன் வீட்டில் உள்ள கூலிக்காரருக்கு பூர்த்தியான ஆகாரம் உண்டு என்று உணர்ந்து, நான் பசியினால் சாகிறேன் என்று கலங்கி தன் நிலைகளிலிருந்து எழுந்து தகப்பனிடத்திற்கு போனாவேன் எந் தீர்மானம் செய்து, தகப்பனே ஒபரத்துக்கு விரோதமாகவும்,உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன்,இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல,உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்று தீர்மானித்து அதைச் செயல்படுத்தும்போது, தகப்பன் அவனை கண்டு மனதுருகி, ஓடி, அவனைக் கட்டிக்க கொண்டு முத்தம் செய்தான். தகப்பன் தன ஊழியக்காரரை நோக்கி,இவனுக்கு உயர்ந்த வஸ்திரத்தை உடுத்தி, கைக்கு மோதிரத்தையும், கால்களுக்கு பாதரட்சையும் போடுங்கள் என்றான்.

                      மனந்திரும்புகிற பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்ற வார்த்தையின்படி மனந்திரும்புகிற நமக்கு இழந்த வஸ்திரத்தைத் தந்து ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார் .  

 2. கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருக்கிறவர்களுக்கு

            '' கர்த்தருக்குள் பூரிப்பை மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்தும களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக் கொள்ளுகிறதற்கும் ஒப்பாக அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்.'' ஏசாயா 61:10.

நாம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருக்க நம்மை ஒப்புக்கொடுக்கும்போது இந்த மேன்மையான இரட்சிப்பின் வஸ்திரத்தைப் பெறுகிறோம். இரட்சிப்பானது ஒரு மேலான மகிழ்ச்சியை உண்டாக்கக் கூடியது. என்னுடைய பாவங்களும், மீறுதலும், அக்கிரமங்களும் கிறிஸ்துவின் 

உடன்படிக்கையின் இரத்தத்தினாலே கழுவப்பட்டது, அகற்றப்பட்டது என்கிற உன்னத நிலையை அடையும் போது, நாம் மிகுதியான மகிழ்ச்சியை அடைகிறோம். இந்த மகிழ்ச்சியை அடைந்த யாவருக்கும் உன்னதமான இரட்சிப்பின் வஸ்திரத்தைத் தந்து, அவர்களை மென்மையாக்கி, நித்தியா நல்வாழ்வைத் தந்து, சுதந்திரவாளிகளாய் மாற்றுகிறார். பரலோகத்தில் தேவசமுகத்திலே இரவும் பகலும் அவர் சிங்காசனத்திற்கு முன்பாக சேவிக்கிற மேன்மையான வாழ்வை பெற முடியும். சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே நம்மை மேய்த்து ஜீவத்தண்ணீருள்ள ஊற்றண்டைக்கு நம்மை நடத்துவார். ஆகவே இந்த இரட்சிப்பின் வஸ்திரம் மேன்மையும் மகிழ்ச்சிக்குரியதுமாயிருக்கிறது.

3. பாவத்திற்கு உடன்படாது வாழுகிறவர்களுக்கு

   ''பார்வோன் தன கையில் போட்டிருந்த தன்  முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய வஸ்திரங்களை அவனுக்கு உடுத்தி, பொன்  சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து,'' ஆதியா 41:42.

         யோசேப்பின் வாழ்வில் பாவ சோதனை வந்த போது, அவைகளுக்கு உடன்படாதபடி, அநித்தியமான பாவ சந்தோஷத்தை வெறுத்தவனாக இருந்தான். இந்த உலக வாழ்க்கையிலே பாவ சோதனைகள் நம்மை நெருக்கி, பரிசுத்தமான வாழ்க்கையிலிருந்து விழுந்துப் போக கிரியைச் செய்கிறது. நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தைத் தள்ளிவிட்டு விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிகிறவருமாகிய கிறிஸ்து இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்த பாதையிலே ஓட  வேண்டும். அத்துடன் பாவத்துக்கு விரோதமாய் போராடுகிற மக்களாய் மாற வேண்டும். யோசேப்பு தேவன் அருளிய ஞானத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டான். ராஜாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் உயர்த்தப்பட்டான். அடிமையாய் விற்கப்பட்டவன், ஆசீர்வதிக்கப்பட்டவனாய் மாறினான்.       

4. ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு

     '' ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான்

கிறுக்கிப்போடாமல், என் பித்த முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.'' வெளி 3:5.

                    நம்முடைய வாழ்க்கையில் நினையாதபடி வரக்கூடிய சோதனைகளை, தோல்விகளை நாம் கிறிஸ்துவுக்குள் தெளிந்த புத்தியோடு விழித்திருந்தது சாவுக்கேதுவாய் இருக்கிறவைகளை, கிறிஸ்துவுக்குள்ளை ஸ்திரப்படுத்தும் வெற்றியுள்ள வாழ்க்கை வாழும் போது, கர்த்தர் வெண்வஸ்திரம் தருகிறார்.

                     இப்படியாக நாம் மனம்திரும்பி இரட்சிப்பின் சந்தோஷத்தால் நிறைந்தவர்களாய், பரிசுத்தமாய் நம்மை காத்துக்கொண்டு ஜெயமுள்ள ஊழியத்தை நாம் செய்யும்போது, இழந்து போன வஸ்திரத்தைப் பெற்றுக் கொள்ளுகிற பாக்கியசாலிகளாய் மாறுவோம்.      

  II. ஒளியை இழந்து போனான்

          ஆதி மனிதன் பாவம் வஸ்திரத்தை இழந்த போது, ஒளியையும் இழந்து போனான். ஆகவே அவன் இருள் நிறைந்த லோகத்தில் வாழவேண்டியவனாய் மாறினான். அத்துடன் மரண இருள் அவனை ஆண்டுகொண்டது. இருளின் அதிபதியாகிய பிசாசானவன் அநேகரை இருளுக்குள் இருக்கிற வேதனையின் வாழ்க்கையை உருவாக்கிவிட்டது.         

யார் ஒளியை இழந்து போவார்கள்?

1. தேவனைத் துதியாதவர்கள்

    '' அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்றும் மகிமைப் படுத்தாமலும், ஸ்தோத்தரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.'' ரோமர் 1:21.

          இன்று அநேகருடைய வாழ்க்கையிலே கர்த்தருக்கு  துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுப்பதில்லை. துதிப்பதை விரும்பாதவர்களாய் இருக்கிறார்கள். துதிகளின் மத்தியில் வாசம் செய்கிற தேவனை துதிப்பதில்லை.துதிக்கு பாத்திரமானவரை துதிப்பதற்கு மனமில்லாதபடியால் அவர்களுடைய இருதயம் உணர்வில்லாதபடி இருளடைந்து விடுகிறது.   

2. பிசாசினால் இருள் அடைந்தவர்கள்

''சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்கு முன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான்.'' சங்கீதம் 143:3.

          இன்று அநேகருடைய வாழ்க்கையிலே பிசாசானவன் அவர்களை இருளிலே வேதனையோடு வாழ வைக்கிறவனாயிருக்கிறான். ஒருமுறை ஒரு குடும்பத்தார் தங்கள் சகோதரியின் திருமண நாளிலே திருமணம் தடைபட்டபடியால் தங்களின் சகோதரியை அருகிலுள்ள ஒரு ஊரில் கொண்டு வைத்து வைத்திருந்தார்கள். அவர்களுக்காய் ஜெபிக்க அழைக்கப்பட்டேன். அந்த மகளின் மனநிலையானது மிகுதியாய் பாதிக்கப்பட்டு தன் அறையின் ஜன்னல் கதவுகளை பூட்டி அமர்ந்திருப்பதை நான் கண்டேன். நான் அங்குச்  சென்ற போது, தன் தகப்பனார் கையைக் கடித்து, இரத்தம் சிந்தத்தக்கதான காட்சியைக் காண முடிந்தது.தலையில் எண்ணெய் வைத்து சீவாமலும் அது ஜடை பிடித்து பரிதாபமாய் இருந்தது. நல்ல கல்லூரிப் படிப்பை முடித்து ஞாயிறு பள்ளி ஆசிரியையாக இருந்து, கர்த்தரின் நாமத்திற்கு சாட்சியாய் இருந்த மகளுக்கு இந்த வேதனையான நிலைமை தோன்றியிருந்தது பிசாசின் தந்திரமான செயலானது அந்த மகளை இருண்ட அறைக்குள் வைத்திருந்ததை காண முடிந்தது.

          மரண இருளின் பள்ளத்தாக்கு என்று சொல்லி, மரண இருளைக் குறித்து சங்.23ல் குறிப்பிட்டிருப்பதை பார்க்கிறோம். ஆகவே மரணத்தின் இருளானது மனிதனுக்குள் ஆதி மனிதனின் கீழ்ப்படியாமையினால் உண்டானது. இருளின் அதிகாரியாகிய பிசாசானவன் அநேகரின் வாழ்வை இருள் நிறைந்த வாழ்க்கைக்குள்ளாய் கொண்டு செல்வதைப்  பார்க்கிறோம்.

          ஒரு முறை ஒரு மனிதனுடைய ஜீவன் போகும் போது தான் இருந்த ஆஸ்பத்திரியில் விளக்கு எல்லாம் எரிந்து கொண்டிருந்த நேரத்தில் ஏன் விளக்கை போடவில்லை என்று சத்தமிட்டுக் கேட்டு தன் ஜீவனை விட்டான். அவனுடைய வாழ்க்கை மரண இருளுக்குள் சென்றதைக் காணமுடிந்தது.

3. சகோதரனைப்  பகைக்கிறவன் இருளில் இருக்கிறான் 

    ''ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.'' 1 யோவான் 2:9

    '' தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.'' 1 யோவான் 2:11

          இன்று மனிதனுடைய வாழ்க்கையிலே தன் சகோதரனைப்  பகைக்கிறவர்கள் நிறைந்திருப்பதை பார்க்கிறோம். காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாக எழும்பி அவனைக் கொலை செய்தான். அதனால் மனிதனுக்குள் சாபம் உண்டானது. இயேசு கிறிஸ்துவின் உபதேச வாக்கியங்களாகிய உன்னைப் போல் பிரானை நேசி என்ற வார்த்தையை மனிதன் அவமதித்து வாழ்கிறபடியால், கிறிஸ்துவின் சபைகளிலும் சங்கங்களிலும் போராட்டம் பெருகி வருகிறது. இவ்விதமான காரியங்களினால் இழந்து போன ஒளியைத் திரும்பப் பெற்று உலகத்தில் நாம் வெளிச்சமாய் இருக்க வேண்டும் என்று ஆதியிலே வெளிச்சத்தை உண்டாக்கின தேவன், விரும்பி வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நம்மை மாற்றும்படி இயேசு கிறிஸ்துவை அனுப்பினார். எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளியாக இயேசுவை அனுப்பினார். அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் மனிதனுக்குள் ஒளியாய் இருந்ததது. இயேசு கிறிஸ்து நான் உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறேன் என்றார்.  

யார் ஒளியை அடைவார்கள் ?

1. இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள்

''...நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்எண்ணெய் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.'' யோவான் 8:12

                மனிதன் பலவிதமான மனிதர்களைப்  பின்பற்றுகிறவனாக இருக்கிறான். ஒரு கூட்டத்தார் அரசியல் தலைவர்களைப் பின்பற்றுகிறார்கள். ஒரு கூட்டத்தார் சினிமா நடிகர்களைப்  பின்பற்றுகிறார்கள். சிலர் துன்மார்க்கரைப்  பின்பற்றுகிறார்கள். ஆனால் 

நாம் மையான ஜீவஒளியை அடைய இயேசு கிறிஸ்துவைப்  பின்பற்ற வேண்டும். அவரை நோக்கி பார்த்தவர்கள் பிரகாசமடைந்தார்கள். தேவ சமூகத்திலே தேவனோடு பேசியவர்களின் முகங்கள் பிரகாசிக்கத் தக்கதாக மாறியது.

2. வார்த்தையின்படி செய்யும்போது

 '''....ஜீவவசனத்தைப்  பிடித்துக்கொண்டுஉலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்'' பிலிப்பியர் 2:14.

        தேவனுடைய வார்த்தைகள் நம்முடைய கால்களுக்குத் தீபமும், பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. ஆகவே நமது செய்கைகளையும், சிந்தைகளையும் எண்ணங்களையும் மாற்றி சீர்ப்படுத்தும்போது, நாம் ஒளியை அடைகிறோம்.

3. சகோதரனை நேசிக்கும்போது ஒளியை அடைகிறான்

'' தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக் கிறான்அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை.'' 1 யோவான் 2:10

       கிறிஸ்துவின் அன்பு நமக்குள் பெருகும்போது பிறரை நேசிக்கத் தக்கதான உள்ளமும், வாஞ்சையும் விருப்பமும் உடையவர்களாய் மாறிவிடுகிறோம். கிறிஸ்துவின்  ஆவி நமக்குள் தேவ அன்பை ஊற்றுகிறபடியால் சகோதர அன்பு நமக்குள் பெருகுகிறது. இந்த அன்பு நமக்குள் இருப்பதால் ஒளியின் பிள்ளைகளாய் ஜீவிக்கிறோம்

III) தேவன் கொடுத்த அதிகாரத்தை இழந்து போனான்

'' பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகி பெருகிபூமியை நிரப்பிஅதைக் கீழ்ப்படுத்திசமுத்திரத்தின் மச்சங்களை ஆகாயத்துப் பறவைகளையும்பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லிதேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.'' ஆதியாகமம் 1:28

விரும்பினாலும், உலக ஆசை இச்சைகளினால் சீஷருக்குரிய மேன்மையை, அதிகாரங்களை இழந்து போகிறார்கள். உண்மையாய் சீசனாக மாறும்போது அவருடைய அதிகாரத்தினால் நிறைந்து விடுகிறோம்.

3. தெரிந்துகொள்ளுகிறவர்களை அதிகாரத்தினால் நிரப்புகிறார்

    " வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும்அவர்களை ஏற்படுத்தினார்.'' மாற்கு 3:15.

            கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, தேவன் தம்முடைய அநாதி தீர்மானத்தின்படி நம்மை தெரிந்து கொண்டிருக்கிறார். சவுலைச் சந்தித்த தேவன், அப். 9:15ல் அவருடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக தெரிந்து கொண்ட பாத்திரமாயிருக்கிறான் என்றார். யாக்கோபை தெரிந்து கொண்ட தேவன் நம்மையும் ஒரு நோக்கத்தோடு தெரிந்து கொண்டிருக்கிறார்.என் தாசன், நான் உன்னைத் தெரிந்து கொண்டேன் நான் உன்னை வெறுத்து விடவில்லை என்று சொன்னவர் விசுவாச மார்க்கத்தாரை தெரிந்து கொண்டிருக்கிறார்.

            இவ்விதமான ஆதி மனிதனுடைய பாவத்தினால் இழந்துபோன வஸ்திரத்தையும், அவருடைய ஒளியையும், அவருடைய அதிகாரத்தையும், நம்மில் தேவன் அன்புகூர்ந்தபடியினால், குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாக நமக்கு அருளிச் செய்தபடியால் தேவனை துதிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம்.

                                                                      கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக .

                          கிறிஸ்துவின் பணியில்

                          சகோ. C. எபனேசர் பால்

"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்."

                                                                                                                                                           யோவான் 3:16

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

                   கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன். ஆதி மனிதனாகிய ஆதாமும் ஏவாளும் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் பாவம் செய்தபடியால் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே பிரிவினை உண்டாயிற்று. சாப்பிட வேண்டாம் எனக் கூறிய பழத்தை சாப்பிட்டபடியால் அவன் தேவனுடைய உறவை இழந்தான். பல வேதனைகளும் சாபங்களும்,பாடுகளும், மரணமும் அதனால் தோன்றின. தேவனின் மகிமையான சாயலை இழந்து அந்தகாரமும் கெடும் அடைந்தான். அதோடு மாத்திரமல்ல, தேவ சாயலாய் வாழ்ந்த அவன், அந்த சாயலினால் உண்டான மேன்மைகளையும் மகிமையானவைகளையும் நித்திய நல்வாழ்வையும் ஆசீர்வாதங்களையும் சுதந்தரத்தையும்  இழந்துப் போனான்.

           ஆகவே நம்மீது அன்புகூர்ந்த  தேவன், நாம் கெட்டுப்போகாமல் ஜீவனை அடைவதற்கு,தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை சத்திய வழியாக இவ்வுலகத்திற்கு அனுப்பினார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினால் தேவ  சாயலாய் வாழ்ந்த நம் வாழ்வில் இழந்து போன சகல ஆசீர்வாதங்களையும் திரும்பப் பெற்றுக்கொள்ளுகின்ற சிலாக்கியம் நமக்குக்  கிருபையாகக்  கிடைத்தது. மனிதன் இழந்து போன காரியங்கள் அநேகம் உண்டு. அந்த இழந்து போன்றவைகளில் சிலவற்றை பெறுவதற்கான வழிகளையும் முறைகளையும் செய்கை களையும் நாம் இந்த நாளில் அறிந்து கொள்வது நலமாய் இருக்கும். ஆகவே தான் லூக்கா 

19:10ல் இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்று பார்க்கிறோம்.

1.வஸ்திரத்தை இழந்து போனான்                                

               தேவன் ஆதியிலே ஏதேன் தோட்டத்திலே ஆதாமே நீ எங்கே இருக்கிறாய் என்று அழைத்த  அவர் சத்தத்தைக் கேட்ட ஆதாமும் ஏவாளும் நங்கள் நிர்வாணியாய் என்றுக்  கூறி ஒளித்துக் கொண்ட சம்பவத்தை ஆதி 3:10ல் பார்க்கிறோம். அவன் தேவனுடைய சாயலில் இருந்தபொழுது ஒளியின் வஸ்திரத்தை தரித்திருந்தான். ஆனால் அதை இழந்தபடியால் இருள் அவனை மேற்கொண்டது. ஒளியின் வஸ்திரத்தை இழந்து போனான். இழந்தவைகளில் முதலாவது அவரோடு இருந்த நல்ல உறவையும், ஒளியின் வஸ்திரத்தையும் இழந்து போனான். ஆகவே நிர்வாணியாக மாறினான்.

ஏன் வஸ்திரத்தை இழந்து போகிறோம் ?

1. பாவத்தினால்.

'' அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து ஒளித்துக்கொண்டேன் என்றான்."ஆதியாகமம் 3:10

கீழ்ப்படியாமையின் பாவமானது தேவனுக்கும் நமக்கும் தடுப்புச் சுவராக மாறினதோடு அவரின் சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட நம் வாழ்வில் ஒளியின் வஸ்திரத்தை இழந்து போக காரணமாயிற்று. சங்கீதம் 104:2 ல் ஒளியை வஸ்திரமாகத் தரித்திருக்கிற தேவன் என்று பார்க்க முடிகிறது.வெளிச்சம் இல்லாது இருள் வந்தபடியால் நாம் நிர்வாணிகளாய் மாறிவிட்டோம்.

                ஒரு முறை வயது முதிர்ந்த ஒரு தேவா ஊழியருக்காக நான் ஜெபிக்க அழைக்கப்பட்டிருந்தேன். வயதானவர்,மனைவி பிள்ளைகளாய் இருந்ததா ஒரு குடும்பம். தேவனுடைய வார்த்தையை மீறி தேவனுக்கு பிரியமில்லாத தவறான தீயதான காரியத்தைச் செய்தபடியால், அவர் மிகுந்த வேதனையோடு தவித்துக் கொண்டிருந்தார். எனக்கு வஸ்திரம் இல்லையே என்று மிகுந்த வேதனையோடு 

சொல்லிக்கொண்டிருந்தார். 5 வேஷ்டிகளை (உடுத்தும் உடையை ) உடுத்திருந்தும், மேற்கொண்டு எனக்கு வேஷ்டி வேண்டும் என்று தன மனைவியிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அவரது வாழ்க்கையிலே மென்மையான வல்லமையான ஊழியத்தைச் செய்தும், செய்த பாவத்தினால் இரட்சிப்பின் மேன்மையான வஸ்திரத்தை இழந்து போயிருப்பதைக் காணமுடிந்தது.

                 இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையும் அப்படித்தான். கிறிஸ்துவுடன் உள்ள வாழ்க்கையை நாம் இழந்து போகும் போது, நாம் நிர்வாணிகளாய் மாறி விடுகிறோம்.

2. பின்மாற்ற வாழ்க்கையினால் வஸ்திரத்தை இழந்து போகிறோம்.

"இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உ ரிந்துகொண்டு,அவனைக் காயப்படுத்தி,குற்றுயிராக விட்டுப் போனார்கள்." லூக்கா 10:30

              எருசலேம் என்பது தேவன் தங்குகிற  ஒரு ஸ்தலம். கர்த்தருக்கு பயந்து வாழ்கிறவர்கள்  எருசலேமின் வாழவைக்க காண்பார்கள் என்று சங்கீதம் 128:5ல் பார்க்க முடிகிறது.இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள், தங்கள் பிதாக்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்கு எருசலேமுக்கு வந்தார்கள்' என்று 2 நாலா 11:16ல் பார்க்க முடிகிறது. 'எருசலேம் இசை விணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது. அங்கே இஸ்ரவேலுக்கு சாட்சியாகக்  கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தை ஸ்தோத்தரிப்பதற்குப் போகும் ' என சங்கீதம் 122:3,4ல் பார்க்க முடிகிறது.இவ்விதமான மேன்மையான தூய வாழ்க்கை நடத்தக் கூடிய எருசலேமை விட்டு நூனின் குமாரனாகிய யோசுவாவின் மூலமாய் சபிக்கப்பட்ட எரிகோவை நோக்கிச் செல்லும் போது நம் வாழ்வில் பிசாசானவன் நம்மைக் காயப்படுத்தி குற்றுயிராய் விட்டுச் செல்வதோடு நம்முடைய மேன்மையான வஸ்திரத்தை உரிந்து விடுகிறான்.

3. ஆகாரமின்றி பிசாசுகளைத் துரத்துவதினால் 

          '' பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம் பண்ணி , அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள்.'' அப் 19:16.

               தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்தரவாதிகளாகிய யூதரின் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்ல துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில்  ஆணையிட்டு உங்களுக்கு கட்டளையிடுகிறோம் என்றார்கள். பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன்,பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, அவர்கள்மேல் பாய்ந்து. (அப் 19:13, 15). ஆகாரமின்றி துரத்தினபடியால் வஸ்திரத்தை இழந்து போனார்கள். நாம