சிந்தி செயல்படு

'' ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுநான் உன்னை விடுவிப்பேன்நீ என்னை மகிமைப்படுத்துவாய்.''

சங்கீதம் 50:15

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய  நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

ஒரு நாள் காலை நேரத்திலே பள்ளிக்குச் சென்ற 10-வது  வகுப்பு படித்துக் கொண்டிருந்த மகள் வீடு திரும்பவில்லை என்று மிகுந்த கவலையோடு ஒரு சகோதரி ஒரு ஜெப விண்ணப்பத்தை கொடுத்தார்கள். அந்த மகளுடைய ஜெப விண்ணப்பத்திற்காக ஜெபித்த போது, உள்ளத்தில் 3 மணி நேரத்திற்குள்ளாக அந்த மகளைப் பற்றிய தகவல் கிடைக்கும். கலங்காதிருங்கள் எண்டு ஆறுதல் வார்த்தைகளைக் கூறி ஜெபித்தேன். அடுத்த தினத்திலே அந்த சகோதரி கர்த்தருடைய பெரிய கிருபையினாலே வீட்டை விட்டுச் சென்ற மகளை தன்  வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். அந்த சகோதரிக்குளாய் மிகுந்த வேதனை இருந்தது. நான் நேசித்த ஒரே மகள் ஏன் இப்படிச் செய்தாள்  என்று மிகுந்த துயரம் அடைந்தார்கள். ஆவலுடன் இணைந்து சென்ற மற்றொரு 12ம் வகுப்பு மாணவியின் பெற்றோரும் அவ்வாறே கலங்கியிருந்தார்கள்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவ்ரகளே, மகளின் செயலில் துக்கமும் துயரமும் அடைந்த போதிலும் கலங்காது, ஜெபித்தார்கள். அந்த மகளின் ஜெபத்தைக் கேட்ட தேவன், அதிசயம் செய்தார். அருமையான தேவ ஜனமே நம்முடைய வாழ்க்கையில் எப்போதும் உதவி செய்யக்கூடிய உன்னதமான தேவன் நமக்கிருக்கிறார். கலங்காதே, திகையாதே, நான் உன் தேவன் என்று சொன்ன தேவன், என்றும் எப்போதும் உதவி செய்ய உண்மையுள்ளவராயிருக்கிறார். அவர் சமூகத்தை நாம் தேடும்போது அதிசயமான விதத்தில் துயரம் நிறைந்த நம் வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாய் மாற்றி விடுவார். அவர் இன்றைக்கும் ஜீவிக்கிறவராய் இருக்கிறபடியினால் அதிசயங்களை செய்கிறார்.

அன்பான சகோதரனே/ சகோதரியே, இழந்து போனதை இரட்சிக்க வந்த இயேசு கிறிஸ்து நம்முடைய ஜெபத்தைக் கேட்டு சஞ்சலங்களை நீக்குகிறார். இன்று முதல் உள்ளத்தை திடப்படுத்தி, நம்முடைய பிரச்சனைகள் தீர, போராட்டங்கள் நீங்க, பிரகாசமடையச் செய்வார். மகிழ்ச்சியும் சமாதானமும் நம் எல்லைகளில் பெருகிவிடும். எதைக்குறித்தும் கலங்காது கர்த்தரையே தேடுவோம், துதிப்போம். அவர் அதிசயங்களை செய்வார்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக

சகோ. C. எபனேசர் பால்