கால்களில் வேதனையுள்ள மக்களின் வேதனை நீங்கி சுகமடைய ஒரு ஜெபம்

 

அன்பின் தேவனே,  இந்த நல்ல ஜெப நேரத்திற்காக நன்றி கூறுகிறேன். கடந்த நாட்களில் என் ஜெபத்தைக் கேட்டு எனக்குள் அற்புதமான சுகத்தைத்  தந்த இயேசு கிறிஸ்துவே உமக்கு ஸ்தோத்திரம். எத்தனையோ முறை என் ஜெபத்தைக் கேட்டு என் துக்கங்களை நீக்கி, சந்தோசத்தைப்  பெருகச் செய்த தேவனே உமக்குக் கோடான கோடி ஸ்தோத்திரம். நீர் என் குடும்பத்தின் மக்களிலும், கணவன் /மனைவியிலும்   அற்புதமான மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் தந்தபடியால் உமக்கு ஸ்தோத்திரம். கர்த்தாவே , இப்பொழுதும் என் கால்களிலுள்ள வேதனை முற்றிலுமாய் நீங்க எனக்கு  உதவிசெய்யும். அநேக நேரங்களிலே என் கால்களிலுள்ள வேதனை என்னைப் பெலவீனப்படுத்துவதோடு, என் உள்ளமானது கசப்படைகிறது. என்னைக் கைவிடாத தேவனே, எங்கள் ஜெபத்தைக் கேட்கிறவரே, என் ஜெபத்தைக் கேட்டு, என் கால்களின் வேதனையை நீக்கிப் பூரண சுகத்தைத் தாரும். மற்றவர்களுக்காக நான் ஜெபித்த ஜெபத்தைக் கேட்டு, அவர்களின் வேதனை நீங்கச் செய்தவரே , எனக்கு இரங்கும் .  என்னிலுள்ள இந்த வேதனையானது பலவித பாவ சிந்தைகளை என்னில்  உண்டாக்குகிறது . என் அவிசுவாசத்தை நீக்கி, எனக்குள் ஓர் அற்புதத்தைச் செய்யும். மான்களின் கால்களைப் போல மாற்ற ஆற்றலுடையவரே, எனக்கு இரங்கும்; என் கால்களைக்  குணமாக்கும். ஓடினாலும் களைப்படையாதபடி புதுபெலத்தைத் தருகிற தேவனே, என் கால்களிலுள்ள வேதனையை நீக்கி, என்னை உயர் ஸ்தலத்திலே  நிறுத்தும். என் கால்களின் நரம்புகள், தசைகள் எல்லாவற்றையும் உண்டாக்கினவர் நீர். நீர் மாத்திரமே எனக்கு சுகம் தர வல்லவர். இயேசு கிறிஸ்துவே, கால்களின் வேதனையினால் கண்ணீர் சிந்துகிற எனக்கு இரங்குவீராக. நீர் எனக்கு சுகம் தருகிறபடியால் உமக்கு ஸ்தோத்திரம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன், நல்ல பிதாவே, ஆமென்.