அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெபவேளைக்காக நன்றி கூறுகிறேன். என் மகன் / மகள் தேர்வில் வெற்றி அடையும் படியாக நீர் தயவு செய்த படியால் உமக்குக் கோடாகோடி ஸ்தோத்திரம். என் மகன்/மகள் வெற்றி பெற்றாலும், நான் எதிர்ப்பார்த்த மார்க் பெறவில்லை என்று அடிக்கடி கவலையும் கோபமும் தோன்றுகிறது. சில சமயத்தில் உன்னோடு படித்த அவன்/அவள் எவ்வளவு மார்க் அதிகம் பெற்று மகிழ்ச்சியாயிருக்கிறான்/ மகிழ்ச்சியாயிருக்கிறாள் என்று ஒப்பிட்டுக் கூறி, நான் தேற்றுவதற்குப் பதிலாக அவனை/அவளைத் துக்கப்படுத்துகிறேன். கர்த்தாவே, இது மாற உதவிச் செய்யும். கர்த்தாவே, என் மகன்/மகள் நன்றாய்ப் படித்து நலமான உத்தியோகத்தைச் செய்வான்/செய்வாள் என்ற எண்ணம் குறைந்து கலங்குகிறேன். கர்த்தாவே, இதுவரை நான் நினைத்த, விரும்பிய படிப்பைப் படிக்கவேண்டும் என்ற வாஞ்சை இருந்தது. உம் சித்தம் அவர்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கு இடம் கொடாதபடி தவறு செய்த என்னை மன்னியும். பிள்ளையால் படிக்கமுடியாத பாடத்தை படிக்க எந்த வகுப்பிலும் சேர்த்து விடாதபடி கர்த்தாவே தயவாய்க் காத்துக்கொள்ளும். இனி வரும் காலத்தில் அவர்கள் நன்றாய்ப் படித்து, மிகுதியான மதிப்பெண் எடுத்து, கல்லூரிகளில் சேருவதற்கு எளிதாய் இருக்க உதவிச் செய்யும். கர்த்தாவே, என் வீட்டிற்கு அருகே உள்ள பாடசாலையில் /கல்லூரியில் அட்மிஷன் கிடைத்துப் படிக்க உதவி செய்யும். சேருகிற பள்ளியிலும்/ கல்லூரியிலும் ஏற்ற நல்ல நண்பர்களைத் தந்து ஆசீர்வதியும். என் மகன்/மகள் பெற்றோராகிய எங்களுக்கு மகிழ்ச்சியையும் மெய்யான புகழ்ச்சியையும் கொண்டு வரத்தக்கதாக அவர்களை ஆசீர்வதியும். இதைச் செய்வீர் என்று உம்மை ஸ்தோத்தரிக்கிறேன், துதிக்கிறேன்.இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், நல்ல பிதாவே ஆமென் .