சிந்தி செயல்படு

                                          "கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்..."

                                                                                                                                                 சங்கீதம் 138:8

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

ஒரு முறை அருமையான ஒரு சகோதரனை ஒரு தேசத்தில் உள்ள ஜெபக்குழுவினர் ஊழியத்திற்கென்று அழைத்தார்கள். அதில் அநேகர் திருமணமாகாத வாலிபர்கள். இப்படிப்பட்ட ஜெபக்குழுவினராய் இருந்த அவர்கள் அந்த ஊழியருக்கு எப்படி நாம் ஆகாரம் செய்வது, அவர் என்ன விதமான ஆகாரம் சாப்பிடுவார் என்று பல கவலையோடு இருந்தார்கள். அதினிமித்தமாய் அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாத நிலையில் இருந்தார்கள். ஆனால் அந்த ஊழியரோ அந்த நாளில் வந்தபோது, அவர்களிடத்தில் முதலாவது சொன்ன ஒரு காரியம், என்னுடைய சாப்பாட்டைக் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் ஊழியம் செய்ய இருக்கிற இந்த 14 தினங்களும் உபவாசத்தோடு இருக்கிறேன் என்று சொன்னபடியினாலே, அந்த ஜெபக்குழுவினருக்கு மிகுதியான ஆச்சரியம்.

இன்றைக்கு அநேகருடைய வாழ்க்கையிலே நான் என்ன செய்வேன், எப்படி என்னால் செய்ய முடியும் என்று பலவிதமான காரியங்களை சிந்தித்து, அதினிமித்தமாய் சோர்வடைகிற மக்களாய் இருக்கிறோம். கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே, இந்த அருமையான கிறிஸ்மஸ் பண்டிகையின் காலத்தில், நான் என்ன செய்வேன், எனக்குப் பணமில்லையே, எனக்கு போதுமான காரியங்கள் இல்லையே என்று பலவிதமான கேள்விகளைக் கேட்டு கலங்கிக் கொண்டிருக்கலாம். அன்று கல்லறைக்குச் சென்ற மரியாளைப் போல யார் நமக்காக கல்லைப் புரட்டுவார்கள் என்று ஒரு கலக்கத்தோடு, தயக்கத்தோடுகூட இருக்கலாம். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ நமக்காக யாவையும் செய்து முடித்தவர். அவர் ஒருபோதும் நம்மைக் கைவிடுகிற தேவனல்ல. ஆகவே நாம் இன்று அவருடைய சமுகத்திலே அவரை முழு மனதோடு தேடுவோம். அவர் சமுகத்தில் மன்றாடுவோம். மகிழ்ச்சியோடு காரியங்களைச் செய்ய கற்றுக் கொள்வோம். அவர் கைவிடாதபடி நம்மை எல்லா சூழ்நிலையிலும் வழி நடத்தி ஆசீர்வதிக்கிறவராயிருக்கிறார். அந்த அன்பின் தேவனுடைய ஆசீர்வாதங்களை நாம் பெற்றுக் கொள்வோமாக.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சகோ.C.எபனேசர் பால்