சிந்தி செயல்படு

"அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்."

 சங்கீதம் 147:14.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

ஒருமுறை ஒரு சகோதரரின் மனைவிக்கு வெளிநாட்டில் பணி செய்ய வாய்ப்பு உண்டானது. அவர்களின் கணவரும் சரி என்று சம்மதம் தெரிவித்ததால், தங்களின் ஒரே மகளுடன் வெளிநாடு சென்றுவிட்டார்கள். கணவனும் அதே நாட்டிற்குச் செல்ல ஏற்கெனவே வழி உண்டானதால் இந்தத் தீர்மானம் செய்திருந்தனர். கணவர் அங்கு செல்வதற்கு அங்கிருந்த அதே கம்பெனியார் அழைப்பைக் கொடுத்திருந்தார்கள். சில மாதங்கள் சென்று விட்டது. ஒன்றாக சமாதானத்துடன் வாழ முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. கணவனின் அலுவலகத்தில் இருந்த மேனேஜர் நான் உன்னை U.S.A. அனுப்ப அனுமதிக்க மாட்டேன் என்று திட்டமாய் கூறிவிட்டார்கள். இக்கட்டான நிலை. ஜெபத்தில் தரித்திருந்தார்கள். தங்களின் பிரச்சனையைத் தேவனுக்கு வேண்டுதலினாலும், விண்ணப்பத்தினாலும் தெரிவித்தார்கள். கணவனின் மேல் அதிகாரியாகிய சகோதரிக்கு இருந்த ஒரே மகள் நோய்வாய்ப்பட்ட தினால் அவர்கள் சில நாட்கள் விடுமுறை எடுத்தார்கள். அந்தப் பொறுப்பை எடுத்த மேனேஜர் அந்த கணவரை உடனடியாக ரிலீவ் செய்து U.S.A. க்கு அனுப்பிவிட்டார்கள் கர்த்தர் அவர்களின் குடும்ப எல்லைகளிலும், வேலை செய்த எல்லைகளிலும் சமாதானம் உண்டாக்கினார்.

அன்பு தேவப்பிள்ளையே, உன் எல்லைகளைச் சமாதானமாக்குகிற கர்த்தாதி கர்த்தர் ஜீவிக்கிறார். சமாதான பிரபுவாக இவ்வுலகத்தில் வந்த அந்த அன்பின் இயேசு கிறிஸ்து, உன் பிரச்சனைகள் சமாதானத்தைக் கெடுக்கும் காரியத்தை தெரிவிக்கும்போது, அவரின் தேவசமாதானம் உன் இருதயத்தின் சிந்தைகளைக் கிறிஸ்து இயேசுவுக்குள் காத்துக்கொள்ளும். நமக்கு நம் எல்லா பிரச்சனைகளிலும், இக்கட்டுகளிலும் கிருபையாய் கண்மணிபோல் காக்கும் அன்பின் தேவன் கைவிடமாட்டர். அதிசயமாய் சமாதானம் தந்து ஆசீர்வதிப்பார்.    

  கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சகோ.C. எபினேசர் பால்.