"அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கிவிடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை உயர்த்திக் கொடுமையான  மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்."

                                                                                   2.சாமுவேல் 22:49

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

ஒரு விடுதலை ஜெப முகாம் கூட்டத்தில் பங்கு பெற்ற ஒரு சகோதரி ஜெபிக்கவந்தார்கள். கர்த்தரின் ஆவியானவர் அவர்களின் வேலை ஸ்தலத்தில் உள்ள ஒரு பிரச்சனையை வெளிப்படுத்தினார். உங்கள் வேலை ஸ்தலத்தில் உள்ள ஒருவரால் உங்களுக்கு பிரச்சனை வருகிறது. உங்கள் வேலையே போய் விடும் என்றும் வெளிப்பாடாக கூறப்பட்டது. அந்தச் சகோதரிக்கு ஒரே ஒரு உதவியாளர்தான் இருந்தார். அடிக்கடி இவருடைய பணம் காணாமற் போய்க்கொண்டிருந்தது. அந்த உதவியாளர் ஒரு நாளில் தான் பணியாற்றிக்கொண்டிருந்த அந்த தபால் அலுவலகத்தில் service stamp- யைத் திருடி தன் சட்டைக்குள் ஒளித்து வைத்துக் கொண்டார். ஆனால் அவரை அறியாமலேயே அந்த service stamp வெளியே விழுந்துவிட்டது. அதைக்கண்ட சகோதரி அவரை எச்சரித்தார்கள். உடனே அந்த மனிதன் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினதினால் அவரை விட்டு விட்டார்கள். ஆனால் அந்தச் சகோதரி தன் மேல் அதிகாரிகளுக்கு அவரின் திருட்டுச்செயலைக் கடிதம் மூலம் அறிவித்துவிட்டார்கள். சில நாட்களிலேயே அவர் வேறு ஒரு போஸ்ட் ஆபீஸ்க்கு மாற்றம் செய்யப்பட்டார். அவரின் குடிப்பழக்கத்தினால் திருடப் பழகிவிட்டார். அடுத்த போஸ்ட் ஆபிஸில் பணம் திருடிய போது கையும் களவுமாய் மாட்டிக்கொண்டார். ஆனால் அந்த மனிதர் அன்றே தற்கொலை செய்துகொண்டார். தான் முன் வேலை பார்த்த இடத்திலுள்ள சகோதரியும், இந்த போஸ்ட் ஆபீஸில் பணிபுரிந்த சகோதரியும் தான் தன் தற்கொலைக்குக் காரணம் என்று ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். விசாரணையின் போது, சகோதரி தெளிவாக கடிதத்தின் மூலம் தெரிவித்து இருந்தபடியால் எந்த இடையூறும் இல்லாதுபோயிற்று.

அன்பு சகோதரனே, சகோதரியே, நம் வாழ்வில் நம்மை அதிகமாக நேசிக்கும் இயேசு கிறிஸ்து தம் ஆவியானவர் மூலம், வரக்கூடிய பிரச்சனைகளை முன் அறிவித்து நம்மை எச்சரிக்கிறார். அதனைக்கேட்டு கவனமாய் இருப்போமானால் ஒன்றும் நம்மை அணுகாது, சேதப்படுத்தாது இந்த எச்சரிப்பை வேத வாக்கியம்மூலம், சொப்பனம்மூலம், தேவ ஊழியரின் மூலம் முன் அறிவிக்கிறார். தீங்குக்கு விலக்கி காக்கிறார்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சகோ.சி. எபனேசர்பால்.