'…உன் சந்ததியின் மேல் என் ஆவியையும்,

                            உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.'

                                                                                           ஏசாயா 44:3

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

          கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு ஊரில் மாதந்தோறும் ஒரு நாள் ஜெபக்கூட்டம் நடத்தி வந்தோம்.வீட்டின் சொந்தக்காரர் ஆசிரியராக இருந்தார்கள்.அவருடைய மனைவியும் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டு இருந்தார்.இவர்களுக்கு குழந்தை இல்லாதபோராட்டமான நிலை. இவர்களின் வாழ்வில் மிகுந்த வேதனை இருந்தது. மூன்று முறை கருத்தரித்தும் சில மாதங்களிலேயே அந்த பிள்ளை வெளியேறி விட்டது. பரிசோதனை செய்த அனுபவமிக்க மருத்துவர் உங்கள் கர்ப்பப்பை மிகச் சிறியது. ஆகவே குழந்தை அதில் வளர்ந்தவுடன் தங்க முடியாதுஅபாஷன் ஆகிவிடுகிறது என்று கூறியதுடன்,ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளுங்கள்என்று கூறி விட்டார்கள்.மிகவும் துக்கத்துடன் இருந்த நிலை.இவர்கள் தங்களின் வீட்டில் மாத மாதம் நடத்திய ஜெபக்கூட்டத்திற்கு இடம் கொடுத்தார்கள்.

           ஒரு நாளில் கர்த்தர் உங்களுக்கு ஒரு குழந்தையைத் தருவேன் என்று வாக்கருளினார்.கர்த்தர் சொன்னபடியே அந்த வீட்டின் சகோதரி கர்ப்பவதியானார்கள்.

           மூன்று, நான்கு மாதத்தில் ஆபாஷன் ஆகிவிடுமே என்ற பயமும் இருந்ததது. கர்த்தர் குழந்தை தருவேன் என்றபோது  உங்கள் வீட்டின் வலதுபுறம், இடதுபுறம் வசிப்பவர்கள் ஒரே மதத்தை சேர்ந்த படியால், இந்த வீடும் நமக்கு சொந்தமாகிவிட்டால் நன்றாக இருக்குமே என்று செய்த சூனியத்தின் காரியத்தை வெளிப்படுத்தினார். குழந்தை தாயின் வயிற்றில் வளரஆரம்பித்தபோது, இந்த வீடு தனக்காக வேண்டும் என்று சூனியம் செய்தவர் ஒரு விபத்தில் மரித்துப்போனார்.வீட்டை ஊழியத்திற்கு திறந்து கொடுத்த ஆசிரிய குடும்பத்தில் நல்லதொரு ஆண்பிள்ளையைக் கர்த்தர் கொடுத்தார்.

   இதை வாசிக்கும் தேவப்பிள்ளையே, கர்த்தருக்காக வாழவும்,அவர் ஊழியம் நடைபெற உங்கள் வீட்டைத் திறக்கும்போது, சூனியங்களையும், சாபங்களையும் கர்த்தர் அகற்றுவார். 'என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்.' என்ற யாத்திராகமம் 20:24ன் வாக்குறுதியை நிறைவேற்றி ஆசீர்வதிப்பார்.

          கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக .

சகோ. சி. எபினேசர் பால்