"அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்...

                                                                                                                               ரோமர் 12:11

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

ஒரு முறை ஓரு விமானப்பயணத்தில் எங்களின் 'hand luggage' ஐ  நாங்கள் உட்காரவேண்டிய இடத்தின் வரிசைக்கு முன் இரண்டு வரிசையில் உள்ள luggage வைக்கும் இடத்தில்  எங்கள் பெட்டியை  வைத்தோம். இடம் இல்லாதபடியினாலும் விமானப்பணியாளர் சொன்னதினாலும் வைத்தேன். அந்தப் பெட்டிக்குள் தமிழ், ஆங்கில வேத புத்தகங்களும் அன்று பயன்படுத்திய துண்டுகளும் இருந்தது. நாங்கள் இறங்கவேண்டிய விமானநிலையம் வந்தது. பயணிகள் தங்கள் தங்களின் ‘hand luggage' ஐ எடுக்குமுன் இன்னொரு வாலிப சகோதரி அந்த எங்கள் ' hand luggage' ஐ எடுத்து நடக்க ஆரம்பித்து விட்டார்கள். என் மனைவியும் நம் பெட்டியை எடுத்து செல்கிறாள்  என்றார்கள். நம் பெட்டியை போல் இருக்கலாம் என்றேன். ஆனால் அவர்கள் தங்கள் பெட்டியை விட்டுவிட்டு எங்கள் பெட்டியை எடுத்துக்கொண்டு மிக விரைவாக சென்று விட்டார்கள். என் பெட்டியைத்தான் தவறாக எடுத்து செல்லுகிறாள் என்று அறிந்தபோது, அந்த வாலிப சகோதரியை விரைவாகபின் தொடர்ந்தோம். கூட்டத்தின் நடுவில் மறைந்து போய்விட்டார்கள்.

அன்பு சகோதரனே, சகோதரியேஉனக்கு தேவன் கிருபையாக கொடுத்திருக்கிற உடைமைகளையும், உரிமைகளையும், அசதியாயிராமல், ஜாக்கிரதையாய் காத்துக் கொள்ளவேண்டும். நீ வாங்கின நிலத்திற்கு பிறகு வேலி  போடலாம் என்று எண்ணாதே. என்ன ஆகும் என்று எதையும் நினையாது மிகுந்த ஜாக்கிரதையாக செயல்படு. உன் வேலைதொழில், வீட்டின் எல்லைகளிலும் சந்தோஷம் பெருகும். சமாதானமும் உண்டாகும்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சகோ. எபனேசர் பால்.