கண்களில் பாதிப்படைந்தோர் சுகம் உண்டாக ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெப நேரத்திற்காக நன்றி கூறுகிறேன். இன்று என் கண் பார்வையில் உள்ள குறைகளுக்காக உம் பாதத்தில் கெஞ்சி நிற்கிறேன். கர்த்தாவே, அன்று அநேகரில் பார்வை கிடைக்கும்படி அற்புதம் செய்தவரே, இன்று எனக்கு இரங்கும். என் தவறான செய்கையினால் இன்று என் கண் பாதிப்படைந்திருக்கிறது. கண்ணின் பார்வை எவ்வளவு முக்கியம் என்று உணராது, நான் வெகுநேரம் 'லேப்டாப்' 'செல்போன்' என நேரத்தைச் செலவிட்டேன். வீணானதைப் பார்த்து காலத்தைச் செலவழித்தபடியால் மிகுந்த பாடுகளுடன் என் நிலைமை மாறியுள்ளது. வேத எழுத்துக்களை என்னால் சரியாக வாசிக்க முடியவில்லை. சாலையில் வருபவரை அடையாளம் காண முடியாது தடுமாறுகிறேன். போன் நம்பரை வாசிக்க முடியவில்லை. தவறான நம்பருக்கு அதனால் போன் செய்து விடுகிறேன். கர்த்தாவே,  சில படிக்கட்டுகளை சரியாக காணமுடியாது தடுமாறி விழுகிறேன். இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்கும். எண்ணில் வந்த சர்க்கரை நோய் இன்னும் பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்த சர்க்கரை நோயினால் பாதிப்படைந்து கண் தெரியாது போனவர்கள் சிலரைப் பார்த்து இருக்கிறேன். இயேசு கிறிஸ்துவே, இன்று எனக்கு இரங்கி என் பார்வை முழுமையாக இருக்க எனக்கு உதவிச் செய்யும். என் கண்ணில் உள்ள நரம்புகளில் பிரஷர் உண்டாகாதிருக்க எனக்கு உதவிச் செய்யும். இன்னும் கர்த்தாவே, என் கண்ணில் மருத்துவரால் சொல்லப்பட்ட அந்த கேட்ரேக்ட் கரைந்து போக கர்த்தாவே எனக்கு இரங்கி முற்றும் நான் தெளிவாக பார்வையடைய எனக்கு உதவிச் செய்யும். என் சிறு பிராயத்தில் என்னோடு கண்ணாடி அணிந்து படித்தவர்களை அதிகமாக 'கண்ணாடி' என்று பரிகாசமாக அழைத்த காரியத்தை எண்ணி  மனஸ்தாபப்பட்டேன். எனக்கு இரங்கும் கர்த்தாவே, வல்லமையால் என் கண்களைத்  தொடும். நீர் சொல்ல நான் பார்வையடைவேன். எனக்கு இரங்கும் இயேசுவே. எனக்கு இரங்கி நான் சரியாக எல்லாவற்றையும் செய்ய எனக்கு உதவிச் செய்யும். இன்று என் கண்ணின் பார்வையில் உள்ள குறைகளை எண்ணும் போது மிகவும் துக்கமடைகிறேன். சரியாக கலரை காண முடியவில்லை. இந்த கலர் BLIND மிகுதியான வேதனையைத் தருகிறது. எனக்கு இரங்கும். இயேசுவே பூரண பார்வையை சுகத்தைப் பெற இன்றே எனக்கு உதவிச் செய்யும். இயேசு கிறிஸ்துவின் மூலம் வேண்டுகிறேன். நல்ல பிதாவே, ஆமென்.