"...தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள்; அவர்கள் சாபத்தீடானார்கள்;

                       நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து நிக்கிரகம் பண்ணாவிட்டால், இனி உங்களோடு இரேன்."                                                                                                                                                                                                                                                    யோசுவா 7:12

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துகிறேன். ஒரு முறை ஒரு ஸ்தாபனத்தார் செல்வமாய், சிறப்பாய் செயல்பட்டு கொண்டிருந்தார்கள். தங்கள் எல்லைகளுக்கு ஜெபிக்க வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். இவர்கள் கட்டடம் கட்டுவதும் எலெக்டிரிக்கல் வேலை செய்கிற ஒரு பெரிய கம்பெனியாயிருந்தது. இதில் அநேகர் வேலை செய்தார்கள். வேலையானது நிறைவாய் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் இப்பொழுதோ வேலை இல்லாத நிலை, சகலமும் பற்றாக்குறை. இந்த நிலை தான் இருந்ததால் ஜெபிக்க சென்றேன். அவர்களுக்கு ஆலோசனையாக உங்களிடத்தில் உள்ள விக்கிரகத்தை நீக்கி விடுங்கள். சகலமும் சீராகி விடும் என்று கூறினேன். எங்களுடைய எல்லைகளிலே விக்கிரகங்கள் ஒன்றும் கிடையாது என்று அந்த கம்பெனி சொந்தக்காரரும் தலைவரும் கூறினார்கள். உங்கள் எல்லையில் உள்ள விக்கிரகங்களால் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது என்றேன். உடனே அவர்கள் அலுவலகம் முழுவதையும் எல்லாப் பணியாளர்களும் தேட ஆரம்பித்தார்கள். ஒன்றும் காணவில்லை. அவர்களது அலுவலகத்தில் basement-லும் தேடினார்கள். அந்த கம்பெனியின் சொந்தக்காரர் basement-ஐ நடன பயிற்சிக்காக நண்பருக்குக் கொடுத்திருந்தார். அவரோ அதை கொஞ்சகாலம் நடத்திவிட்டு விட்டுவிட்டு போய்விட்டார். அவரது பகுதியைத் தேடினபோது அநேக விக்கிரகங்கள் இருந்த ஒரு மரப் பெட்டியைக் கண்டுபிடித்தார்கள். அதை அகற்றியபின் நினையாத அளவிலே அவர்களின் தொழில் விருத்தியடைந்தது. மேலும் அவர்கள் வீட்டையும் 100 ஏக்கர் நிலத்தையும் வாங்கத்தக்கதாக செழிப்படைந்தார்கள்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, சாபத்தீடான எந்தக் காரியமும் நம் எல்லைகளில் இருக்கும்போது வேதனை அடைந்து எல்லாவற்றையும் இழந்து போகிற மக்களாய் மாறிவிடுவோம். சாபத்தீடானவைகளை நீக்கிவிடும் போது, கர்த்தரின் ஆசீர்வாதம் தடையின்றி நிறைவாகப் பெறுவதற்கு வழியாக இருக்கும்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                         சகோ. C. எபனேசர் பால்.