அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்..."

                                                                                                                                                                                   மத்தேயு 8:17

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, மீட்பரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன் சகோதரர் ஒருவர் தன் நண்பரின் சகோதரிக்காக ஜெபிக்க அவர்கள் வீட்டிற்கு அழைத்தார்கள். அந்த சகோதரிக்கோ கேன்சர் என்றதினால் சென்னை அடையாறில் உள்ள Cancer Institute-க்குச் சென்றிருந்தார்கள். அவர்களுக்குக் குறித்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியதால் அதற்குரிய எல்லாக் காரியங்களையும் ஒழுங்கு செய்திருந்தார்கள் ஆனால் அந்தச் சகோதரி நன்றாய் ஜெபிக்கக்கூடிய ஒரு சகோதரி. அத்துடன் அவர் கணவர் ஊழியம் செய்து கொண்டிருப்பவர். அவர்களுக்காக ஜெபிக்க ஆரம்பித்தேன். ஜெப நேரத்தில் கர்த்தர் வெளிப்படுத்திக் கூறின காரியத்தைத் தெரிவித்து ஜெபித்தேன். சுண்டெலி ரூபத்தில் குடல் பகுதியைக் கெடுத்துக் கொண்டிருக்கிற தீங்கின் ஆவியே வெளியேறு என்று சொன்னவுடன் அந்தச் சகோதரி மிகுதியாக 'ஓ' என்று சத்தமிட்டார்கள். ஜெபம் முடிந்தபிறகு என்ன என்று கேட்டேன். நான் நேற்று இரவில் கர்த்தாவே இரங்கும், என்னைக் குணமாக்கும் என்று மிகுந்த பாரத்துடனும் கண்ணீருடனும் ஜெபித்தேன். இரவிலே ஒரு சொப்பனம் வந்தது. என் குடல் பகுதிகளை ஒரு சுண்டெலி கடித்து கெடுத்துப் போடுவதைப் போல் இருந்தது. நீங்கள் உங்கள் ஜெபத்தில் அந்தச் சுண்டெலியைக் குறித்துச் சொன்னபோது, அடக்க முடியாத அளவில் நான் சத்தமிட்டேன் என்றார்கள். அறுவை சிகிச்சைக்காக குறிப்பிட்ட நேரத்தில் ஆஸ்பத்திரிக்குச் சென்றபோது, அவர்கள் அறுவை சிகிச்சைக்குமுன் ஒரு சோதனை செய்தார்கள். அச்சோதனையில் அவர்களுக்கு எந்த கேன்சரும் இல்லை என்று அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டார்கள். கர்த்தர் ஜெபத்தைக் கேட்டு சுகம் கொடுத்தார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதரனே, சகோதரியே உன்னில் உள்ள பெலவீனங்களை எண்ணி, நோய்களை எண்ணி கலங்க வேண்டாம். கேளுங்கள் கொடுக்கப்படும் என்று கூறிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நாம் உண்மையாய்க் கேட்கும்போது பெலவீனங்களை நீக்கி, பெலன் தருவார். வேதனை நீங்கி சுகமாயிரு என்று சொன்னவர், உன் சுக வாழ்வை மலரச் செய்வார். அவர்தாமே பெலவீனங்களை ஏற்றுக் கொண்டு நோய்களைச் சுமந்தார் என்ற வாக்கின்படி, நோய்களை நீக்குவார். தழும்புகளினால் குணமாகிறோம் என்ற வார்த்தையின்படி இன்றே நோய்களைக் குணமாக்கி உங்களை ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                                           சகோ .C. எபனேசர் பால்.