இம்மட்டும் காத்து, புதிய ஆண்டைக் காணச் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தும்படியாக ஒரு ஜெபம்

அன்பின் தேவனே உமக்கு ஸ்தோத்திரம். கடந்த ஆண்டுகளில் | எனக்கு சுகம் பெலன் கொடுத்து காத்து வந்தீர், அதற்காக உமக்கு கோடா கோடி ஸ்தோத்திரங்களைச் செலுத்துகிறேன். கடந்த ஆண்டில் அநேக இக்கட்டுகள் வந்தபோதும் என்னைக் கிருபையாய்க் காத்தீரே அதற்காக ஸ்தோத்திரம். என் பெலவீனங்களில் எனக்குப் பெலன் தந்து, என்னை நடத்தினீர், உமக்கு ஸ்தோத்திரம் என் சோர்வுகளிலும் என் சோதனை நேரங்களிலும் என்னைக் கண்மணிப்போல் காத்தீரே, அதற்காக ஸ்தோத்திரம், கர்த்தாவே, இந்தப் புதிய ஆண்டுக்குள் பிரவேசிப்பேனா | என்ற பயமும், போராட்டமும் என் உள்ளத்தில் இருந்ததை நீர் அறிவீர். அவைகளை மேற்கொள்ள உதவி செய்தீர். அதற்காக ஸ்தோத்திரம். என் பெலவீனம். என் கவலைகள் நிறைந்த நிலைகளை மாற்றி, இந்த ஆண்டைக் காணச் செய்த படியால் உமக்கு ஸ்தோத்திரங்களை என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து செலுத்துகிறேன். கசந்து கண்ணீருடன்| இருந்த நேரத்தில் நீர் எனக்குச் செய்த உம்முடைய வல்லமையின் செயலை நினைத்து ஸ்தோத்தரிக்கிறேன். என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்தரி, அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே என்று உணர்ந்து ஸ்தோத்திரம் செலுத்திய போது, என் அக்கிரமங்களை மன்னித்தீரே, அதற்காக ஸ்தோத்திரம். என் பிராணனை அழிவுக்கு விலக்கிக் காத்தீரே, அதற்காக உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறேன். கர்த்தாவே என் வாயை நன்மையானவைகளினால் நிரப்பினீரே. அதற்காக ஸ்தோத்திரம். எனக்குள் உமது புதுபெலன் தந்து வழிநடத்தியதற்காக ஸ்தோத்திரம். கர்த்தாவே, இன்னும் இந்த ஆண்டில் உம்மோடு நெருங்கி ஜீவிக்க எனக்கு உதவிசெய்வீர் என்று உம்மைத் துதிக்கிறேன். என்னால் இயலாது என்ற காரியங்களை உம்மால் முடியும் என்று செய்து முடிக்க பெலன் தந்தீரே. அதற்காக ஸ்தோத்திரம். கர்த்தாவே, இந்த ஆண்டிலும் என்னை நேர்த்தியாய் தாங்கி நடத்துவீர் என்று நம்பி உம்மைத் துதிக்கிறேன். கர்த்தாவே, இம்மட்டும் என் ஜெபங்களை ஏற்று என் காரியங்களையும், என் குடும்பத்தில் உள்ளவர்களின் காரியங்களையும் ஆசீர்வதித்தீரே, அதற்காக உமக்கு! ஸ்தோத்திரம் செலுத்துகிறேன். கர்த்தாவே, நீர் இம்மட்டும் எனக்கு பாதுகாவலாக இருந்தீரே, அதற்காக ஸ்தோத்திரம். கர்த்தாவே, இந்த ஆண்டில் உமக்குப் பிரியமான காரியங்களை நான் செய்ய ஞானம். பெலன், சுகம் தாரும். என் ஜெபத்தைத் தயவாய் அங்கிகரியும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் பிதாவே, ஆமென்.