வேதனை நீங்கி சுகமாயிருக்க ஒரு ஜெபம்

அன்பின் தேவனே. இந்த நல்ல ஜெப நேரத்திற்காக உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். என் இக்கட்டான நேரங்களில் உமது சமுகத்தில் நான் ஏறெடுத்த ஜெபத்தைக் கேட்டு ஆசீர்வதித்தீர் அதற்காக ஸ்தோத்திரம் செலுத்துகிறேன். கர்த்தாவே இன்று என் எலும்பிலும், மாம்சத்திலும், ஏற்பட்ட என் பெலவீனம் நீங்க எனக்கு உதவிசெய்யும். எகிப்தியர்க்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன், நானே உன் பரிகாரியாகிய சுர்த்தர் என்று சொன்ன சர்வ வல்லமை நிறைந்த தேவனே, உமக்கு ஸ்தோத்திரம். என் பாவத்தினாலும், மீறுதலினாலும், அக்கிரமத்தினாலும் உண்டான இந்த வேதனையை என்னைவிட்டு நீக்கும். கர்த்தாவே, எனக்கு ஒரு விசை இரங்கும். தயவாய் இரங்கி என் பாவ. சாப நோய்களை என்னைவிட்டு நீங்கச் செய்யும். 'ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு. நான் உன்னை விடுவிப்பேன். நீ என்னை மகிமைப்படுத்துவாய்' என்றவரே, என் ஜெபத்தைத் தள்ளாமல் என்னில் அற்புதமான சுகத்தைத் தருவீராக. தனக்கு உண்டானவை களையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்பட்ட அந்த பெரும்பாடு நிறைந்த மகளின் விசுவாசத்தைக் கண்டு சுகப்படுத்தியவரே எனக்கு இன்றே இரங்கும். என் வியாதிப் படுக்கையை நீர் ஒருவரே மாற்றிப் போட முடியும். 'அவர் தாமே நம்முடைய பெவவீனங்களை ஏற்றுக் கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்.' என்ற வாக்கின்படி, எனக்கு என் நோய்களிலிருந்து சுகம் தாரும். என் பாவங்கள். என் மீறுதல்கள். என் அக்கிரமங்கள் இன்று என் நோய் நீங்க தடையாக இல்லாதபடி அவைகளையெல்லாம் மன்னியும், கர்த்தாவே. இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே எனக்குள் அற்புதம் செய்ய வல்லவர் என்று உம் பாதத்தில் என்னைத் தாழ்த்தி உம்மை நோக்கிக் கெஞ்சுகிற என் ஜெபத்திற்குப் பதில் தாரும். என்னைக் குணமாக்கும். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள் என்ற வார்த்தையின்படி நான் குணமாக எனக்கு உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவே, என் மனதிலே உண்டான துக்கம். மிகுதியான பயத்தை வரவழைத்து, என் சமாதானத்தை இழக்கச் செய்து விட்டது. என்னில் இருந்த விசுவாசமும், குறைந்து சந்தேகத்தை உண்டாக்குகிறது. இயேசு கிறிஸ்துவே,என் வேதனை நீங்கச் செய்து, என்னைச் சுகப்படுத்தி என்னை ஆசீர்வதியும். இனி நான் உமக்கென்று வாழ என்னை அர்ப்பணிக்கிறேன். என்னை ஏற்று, என்றும்

நடத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன் நல்ல பிதாவே ஆமென்.