அன்பின் தேவனே. இந்த நல்ல ஜெப நேரத்திற்காக உமக்கு நல்ல பதிலைக் கொடுத்து ஆசீர்வதித்தீர், அதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். நான் விரும்பி வேண்டின எல்லாக் காரியங்களிலும் ஸ்தோத்திரங்களைச் செலுத்துகிறேன். கர்த்தாவே. என் மகனின் திருமண வாழ்வுக்காக ஜெபித்தேன். ஜெபத்தைக் கேட்கிற அன்பின் தேவனே. ஒரு நல்ல மருமகளை எங்களுக்குக் கொடுத்தீரே, அதற்காக ஸ்தோத்திரம். இன்று அநேக குடும்பங்களில் திருமணம் முடிந்து சில நாட்களிலேயே பிரிந்து விடுகிறது போல பிரியாது. நலமாய் வாழ்கிற படியால் உமக்கு ஸ்தோத்திரம், கர்த்தாவே. இப்பொழுதும் கர்த்தாவே, என்மகளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை வேண்டும் என்பதை நீர் அறிவீர். எங்களுக்கு இரங்கும். ஏற்ற மகனை என் மகளுக்கு விரைவாக கொண்டு வாரும் இயேசு கிறிஸ்துவே. நான் காத்திருக்கிறேன் என்பதை நீர் அறிவீர். இனியும் தாமதியாதபடி துரிதமாய் ஒரு மாப்பிள்ளைப் பையனைக் கொண்டு வாரும். கர்த்தாவே, என் பிள்ளை நல்ல | படிப்பைப் படித்து முடிக்க நீர் உதவி செய்தீர். அதற்காக ஸ்தோத்திரம். உயர் படிப்பைப் படித்து முடித்தும், இத்தனை காலம் காத்திருந்தும் வேலை கிடைக்கவில்லையே என்ற கவலை அதிகமாக மனதைத் துக்கப்படுத்துகிறது. கர்த்தாவே, எனக்கு இரங்கும். இனியும் தாமதியாதபடி காரியங்களை வாய்க்கச் செய்யும். வேலை இல்லை என்ற பிரச்சனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் என் மகன்/மகள் என்ன செய்கிறாங்க என்று கேட்கும்போது, என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. மிகுந்த வெட்கத்துடன் நல்ல வேலை | தேடுகிறான்/தேடுகிறாள் என்று பதிலைக் கூறி, உள்ளத்தில் கலங்குகிறேன். கர்த்தாவே, எனக்கு இரங்கும். இனி தாமதியாதபடி என் | வேண்டுதல்களுக்குப் பதில் தாரும். உம்மைத் தவிர வேறு ஒரு வழியை நான் அறியேன். கர்த்தாவே, என் கெஞ்சுதலுக்கு நல்ல பதில் தாரும். இதை நினைக்கும்போது இரவிலே எனக்குத் தூங்க முடியவில்லை. செய்ய வேண்டிய காரியத்தை அந்தந்த நேரத்தில் செய்ய மறந்து போய், பாடுகளைச் சந்திக்கிறேன். கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறவர்கள் | வெட்கப்பட்டுப்போவதில்லை என்ற வாக்கின்படி, நான் வெட்கப் நீர் எனக்குப் பதில் தந்து என்னை மகிழ்விப்பீர் என்று படாதபடி காத்தருளும். என் வேண்டுதலின் காரியத்திற்குப் பதில் தாரும். விசுவாசிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.