"நான் உனக்குப் போதித்து,
                                                    நீ
நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்"
                                                                                                                                                     
சங்கீதம் 32:8

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

ஒரு முறை உறையூர் C.S.1 மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 'ஒரு வெளிநாட்டு சகோதரிக்கு ஜெபிக்க அழைத்தார்கள். நானும் என் மனைவியும், இன்னும் ஒரு தலைமை ஆசிரிய ஊழியரும், அவரது மனைவியும் மருத்துவமனை சென்று ஜெபித்தோம். ஜெப நேரத்தில் இயேசுவே குணமாக்கும் அல்லேலுயா என்று மாத்திரமே ஆங்கிலத்தில் கூற முடிந்தது. வீட்டிற்கு வந்தபின், என்ன 10 பக்கம் ஆங்கிலத்தில் எழுத முடிகிறது. 4 வாக்கியம் ஆங்கிலத்தில் சொல்ல முடியவில்லையே என்று ஜெபிக்க ஆரம்பித்தேன். ஆனால் நீ இந்த மாதத்தில் ஆங்கிலத்தில் செய்தி தரவேண்டும் என்று கர்த்தரின் ஆவியானவர் கூறினார்.

ஒரு நாள் ஆங்கில இந்திய வகுப்பைச் சேர்ந்த Ehean என்ற சகோதாருடன், Adrin என்பவர் தனது 5 வயது பேச முடியாத பெண் பிள்ளையுடன் ஜெபிக்க வந்தார்கள். அவர்களுக்கோ தமிழ் சரியாக வராது. எனக்கோ ஆங்கிலத்தில் சரியாக ஜெபிக்க முடியாத நிலை. நான் ஆங்கிலத்தில் ஜெபிக்க ஆரம்பித்தேன். கர்த்தர் எனக்கு அற்புதம் செய்தார். அந்தப் பெண் பிள்ளை வாய்திறந்து பேச ஆரம்பித்தது. Ehean சகோதரரை தனியாக அழைத்துச் சென்று ஜெபித்தேன். அவரை ஆட்கொண்டிருந்த தீய ஆவி வெளியேறியது. இயேசுவைப் பற்றி கூறி அனுப்பினேன். அந்தநாள் முதல் மாலையில் அநேக ஆங்கில இந்தியர்கள் ஜெபிக்க வர ஆரம்பித்தனர். என்னுடைய ஆங்கிலத்தின் ஜெபமும் சற்று தெளிவானது.

விடுதலையான சகோதரரின் சகோதரன் பூனாவில் இருந்து வந்து இருந்தார். அப்பொழுது குடிக்கப் பணம் கேட்கும் தன் சகோதரன், Bible வாசிப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு தாயிடம் கேட்க, இங்கு ஒரு பிரதரிடம் ஜெபிக்கப் போனார், அதிலிருந்து ஒரு மாற்றம் என்றவுடன் தானும் தன்னுடன் வந்த நண்பரும் என்னைக் காண விரும்பினார்கள். என் வீட்டிற்கு வந்த போது, கூட கூட்டிக்கொண்டு வந்த நண்பர் தரையிலே விழுந்து புரள ஆரம்பித்தார். அன்று அவரில் இருந்த ஆவி வெளியேறியதால் குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலைப் பெற்றார். வந்திருந்த Noel சகோதரரிடம் வீடுகட்ட வாங்கின உங்கள் இடத்தில் தகடை வாங்கிப் புதைத்திருக்கிறீர்களே என்றவுடன், இங்கு நான் வருமுன்தான் அதைச் செய்தேன் என்றார். அத்துடன் ஒருவரின் அடையாளத்தைக் கூறி அவர்களிடம் என்னைக் குறித்துச் சொல்லுங்கள். அவர் எனக்காக பூனாவிலே கூட்டம் ஒழுங்கு செய்வார் என்றேன். அதைக் கேட்டு பூனா சென்றவர் அதை மறந்து போனார். ஆனால் தனக்கு எதிர்புறத்தில் இருந்த படிகெட் ஏரிவந்த நபர், நான் சொன்ன அடையாளமாக இருந்தபடியால், 'கிறிஸ்தவரா' என்று கேட்க ஆம் என்று காரியங்களைச் சொன்னாராம். என்னுடன் ஆலயத்துக்கு வாருங்கள் என்று Noel-ஐ அழைத்து என்னைப் பற்றி விசாரித்து விட்டு அவரை வரச் சொல்லுங்கள் என்று அன்று C.N.I பிம்பெரி ஆலய போதகர் Rev.Detheh, என்னை வரச் சொல்லி கூறினார். முதல்நாள் கூட்டத்தில் மொழிபெயர்ப்பு செய்ய இருந்த சகோதரர் சாலை நெருக்கடியில் சிக்கிக்கொண்டார். 2 1/2 மணி நேரம் சென்றபின் Rev. Detheh என்னை ஆங்கிலத்தில் செய்தியைச் பேசச் சொல்லி, அவர் மராத்திய மொழியில் மொழி பெயர்த்தார். நானும் அந்நாளில் தயக்கமின்றி ஆங்கிலத்திலேயே செய்தியைச் சொல்ல கர்த்தர் கிருபை புரிந்தார்.

அன்பு சகோதரனே, சகோதரியே, வாழ்க்கையில் அது தெரிய வில்லை, இது தெரியவில்லை என்று கலங்காதே. நமது இரட்சகரும் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்து உன் பாவங்களை மன்னித்து, அவர் வழி நடக்க ஏற்ற போதனைத் தந்து உன்னை ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                         சகோ. c. எபனேசர் பால்.