கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன். ஒரு முறை அமெரிக்கா நாட்டில் உள்ள வாலிபருக்கு மத்தியில் நடைபெறும் ஊழியங்களுக்காக உபவாசத்துடன் ஜெபிக்க வழிநடத்தினார். அவ்வாறு அந்த நாளில் ஜெபித்தேன். அந்த இரவு ஒரு சொப்பனம் வந்தது. அந்தச் சொப்பனத்தில் ஒரு வாலிபன் மாடியிலிருந்து Dancing Hall-ஐ பார்த்துக்கொண்டு இருப்பதைப் போல் இருந்தது. அவன் அணிந்திருந்த 'T' shirt ல் 'America' என்று இருந்தது. அந்த வாலிபன் என்னிடம் நடனமாடுவது தவறா? என்ற கேள்வியைக் கேட்டான். அப்பொழுது நான் அவனுக்கு இவைகள் எல்லாம் பாவங்கள் என்று கூற ஆரம்பித்தேன்.அவனுக்குள் அந்த னுயஉேேைப ழயடட-க்குள் சென்று அங்கு உள்ள பெண்ணோடு நடனமாட விரும்பினதால் இந்தக் கேள்வியைச் சொப்பனத்தில் என்னிடத்தில் கேட்டான். வேதம் தெளிவாகச் சொல்லி இருக்கிறது. ஸ்திரீயை தொடாதிருக்கிறது மனுஷனுக்கு நல்லது. வேசித்தனம் இல்லாதபடிக்கு அவனவன் சொந்த மனைவியையும் அவனவன் சொந்த புருஷனையும் உடையவர்களாக இருக்க வேண்டும் என்று 1கொரி. 7:1, 2 வாக்கின்படி இது தவறு என்று கூறினேன். சொப்பனத்திலே அந்தமகன் பெயர் ஜான் என்றும், அவன் என்னைப் பார்த்து எங்கள் தேசத்தில் இவ்விதமான காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு வந்து எங்களுக்கு இதைச் சொல்லுங்கள் என்ற விண்ணப்பத்துடன் அந்த சொப்பனம் முடிந்தது. அந்த நாளில் கர்த்தர் என்னை அமெரிக்கா நாட்டிற்குச் சென்று ஊழியங்கள் செய்வதற்கு நடத்துகிறாரோ? என்ற கேள்வி உள்ளத்தில் எழும்பிற்று.
இந்தச் சமயத்தில் ஒய்வு பெற்ற ஊழியர் ஒருவர் நடு இரவிலே வீட்டை விட்டு வெளியே சென்று விடுகிறார். அவருக்காக ஜெபிக்க வாருங்கள் என்று திருச்சியிலிருந்து 50 கிலோ மீட்டர் துாரத்தில் இருக்கிற என்னுடன் இணைந்து ஊழியம் செய்து கொண்டிருந்த சகோதரர் அழைத்தார்கள், அந்த நாளில் அவ்விடம் சென்று அந்த ஊழியரோடு இணைந்து கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த, ஊழியரின் வீட்டுக்குச் சென்று ஜெபித்தோம். கர்த்தர் கிருபையாய் இரங்கி, அந்த ஊழியருக்கு விடுதலை யையும், சுகத்தையும் கொடுத்தார். உதவி அடைந்த ஊழியரின் சகோதரி அவர்கள் அமெரிக்க தேசத்தில் இருந்தார்கள்.வியாதியிலிருந்த தன் சகோதரனைக் காண தன் கணவரோடு வந்தார்கள். சுகம் அடைந்த அவரைக் கண்டார்கள். எப்படி அடைந்தார் என்பதை அறிந்தவுடன் நாங்களும் ஜெபித்த ஊழியரைச் சந்திக்க விரும்புகிறோம் என்று கூறினார்கள். ஆகவே நான் அவர்களைச் சந்திக்க அழைப்பைப் பெற்று அங்குச் சென்றேன். அமெரிக்க நாட்டில் இருந்து வந்த சகோதரர் நியூயார்க்கில் இருந்த University ல் உயர்ந்த பதவியில் இருந்தார். சகோதாருக்காய் ஜெபிக்கும்பொழுது, வாலிபருக்கு மத்தியில் ஊழியங்களைச் செய்ய அழைக்கப்பட்டு இருக்கிறீர்களே, ஏன் இன்னும் அந்த ஊழியத்தைச் செய்யவில்லை என்று கேள்வி கேட்டுவிட்டு, ஒரு ஊழியரின் பெயரைக் கூறி, இவர் உங்களை அழைத்தும், செல்லா திருப்பது ஏன் என்று கேட்டேன். நான் ஊழியத்திற்குச் சென்றேன். அது எனக்கு ஏற்றதாய் இல்லாதபடியால் திரும்பி வந்துவிட்டேன் என்று கூறினார். நானும் அவர்களுடைய சுகத்திற்காய், பெலத்திற்காய் ஜெபித்து விட்டு, வீடு திரும்பினேன். அவர்கள் அமெரிக்கா நாட்டிற்குத் திரும்பும் முன் என்னோடு உடன் ஊழியம் செய்து கொண்டிருந்த ஊழியரிடம், அமெரிக்க நாட்டிற்கு அழைத்தால் வருவார்களா என்று கேட்டார். அதை எனக்குத் தெரிவித்தபோது, சரி என்று நான் அந்த அழைப்பை ஏற்று, அந்த நாட்டிற்கு முதன் முறையாய்ச் செல்ல ஆயத்தப்பட்டேன்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கர்த்தர் நம் வாழ்வில் ஏற்ற நேரத்தில் ஏற்ற விதத்தில் ஊழியத்தின் வாசலைத் திறந்து அழைத்து, ஊழியங்களைச் செய்ய வைப்பார். நாம் கர்த்தரோடுள்ள உறவிலே இணைந்தும் அவருடைய நடத்துதலால் நடத்தப்படவும் ஒப்புக் கொடுப்போமானால் கர்த்தர் வாசல்களைத் திறக்க வழி செய்வார்.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
சகோ. c. எபனேசர் பால்.