கர்த்தரின் சகாயத்தை நாம் பெற்றுக் கொள்ள ஒரு ஜெபம்

அன்பின் தேவனே இந்த ஜெப வேளைக்காக உம்மைத் துதிக்கிறேன். மாறாத மகிமை நிறைந்த தேவனே இன்று உமது கிருபை அளிப்பவரே. எனக்கு இரங்கி உதவி செய்யும். பூமியின் பாதத்தில் என்னைத் தாழ்த்துகிறேன் தாழ்மை உள்ளவர்களுக்குக கடையாந்திரங்களிலிருந்து என்னை அமைத்து வந்து நீ என் தாசன் என்று கூறிய காததாவே உமது சகாயத்தை நானும் என் வீட்டாரும் பெற்றுக் கொண்டு ஆசீர்வதிக்கப்பட உமது பாதத்தில் என்னைத் தாழ்த்தி கெஞ்சுகிறேன் நீர் எனக்குச் சகாயம் செய்யும் கேடகமாயிருப்பதினால் நன்றி கடந்த காலத்தில் நீர் பாராட்டிய கிருபைக்காகவும் உதவிக்காகவும் நன்றி கூறுகிறேன் எனக்கு ஒத்தாசை வரும் பர்வதத்தை நோக்கிப் பார்க்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய கர்த்தரிடமிருந்து எனக்கு ஒத்தாசை வரும் என்ற தாவீதைப் போல் நான் உமது சமுகத்தை நோக்கி சகாயம் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். கர்த்தாவே நீர் சகாயம் செய்வீர் என்றால் என் பிள்ளைக்கு வேண்டிய வெற்றியும், வழியும் திறந்துவிடும் நீர் எனக்கு சகாயம் செய்வீரானால் எனது பிள்ளையின் திருமண தேவைகள் சந்திக்கப்படும் கர்த்தாவே, உம்மையே சார்ந்து, காத்துக் கொண்டிருக்கிற எனக்கு உதவி செய்யும் நீர் மனதுருக்கம் நிறைந்து, நான் நினைக்கவும், உணரவும் முடியாத விதத்தில் உமது சகாயம் எனக்குச் செய்வீர் என்று நம்பி உம்மைத் துதிக்கிறேன். உமது காருண்யம் என்னைத் தாங்கியது. உமது கிருபையினால் தயவு பெற்றேன். கர்த்தாவே எனக்கு இரங்கி எனது எல்லாக் காரியங்களிலும் உமது சகாயத்தைப் பூரணமாக விளங்கச் செய்யும் அப்படி நீர் செய்யப்போகிறீர் என்று உறுதியாக நம்பி உம்மைத் துதிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன். உமது உதவியை நான் அடையும்போது மற்றவர்களும் உமது நாமத்தை அறிய உணர முடியுமே எனக்கு இரங்கும் இவை எல்லாவற்றையும் இயேசு கிறிஸ்துவின் மூலம் வேண்டுகிறேன் நல்ல பிதாவே. ஆமென்