"...ஆலோசனைக்கர்த்தர்..."  ஏசாயா 9:6

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

டிசம்பர் மாதம் என்றாலே கிறிஸ்தவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி நிறைந்த மாதமாக உலகமெங்கும் அமைந்திருக்கிறது. கிறிஸ்து பிறந்த மாதமாக உலகம் முழுவதும் கொண்டாடுகிறதை நாம் அறிவோம். எளியவர், ஏழைகள், படித்தவர், படியாதவர், செல்வந்தர் யாவரும் மிகுந்த சந்தோஷத்துடன் கிறிஸ்து உலகத்தில் பிறந்தார் என்ற உன்னதமான காரியத்தை நினைத்து கொண்டாடுகிறார்கள். தேவன், நம்மீது வைத்த அன்பினாலே நாம் கெட்டுப்போகாதபடி நித்தியஜீவனை அடையும்படிக்கு, இயேசு கிறிஸ்துவை உலகத்தில் நமக்காக அனுப்பினார். நம்மை எல்லா ஆக்கினையில் இருந்து மீட்கும் பலியாக இயேசு கிறிஸ்துவை, தேவன் இவ்வுலகத்திற்கு அனுப்பினார். தேவ சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட நாம் பாவத்தினால் அந்த மேன்மையை இழந்துபோய் விட்டோம். 'இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்று லூக்கா 19:10 மூலமாக புரிந்துகொள்ள முடிகிறது. இந்த அன்பின் தேவன் நம்மை நேசித்து, இரட்சிக்க குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பின செயலை நினைத்து தான் இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள். அத்துடன் இயேசு கிறிஸ்து பிசாசின் கிரியைகளை அழிக்கும்படிக்கு, நாம் பிசாசினால் பாதிப்படையாதபடி காப்பதற்காகவும், பாதிக்கப்பட்டவர்களை விடுவிக்கவும், குணமாக்கவும், விடுதலையின் வாழ்வுக்காகவும் இவ்வுலகில் வந்த செய்கையை நினைத்து மகிழ்ச்சியுடன் தான் கிறிஸ்மஸ் கொண்டாடுகிறோம். அத்துடன் எல்லா முகங்களிலுமிருந்து வழியும் கண்ணீரைத் துடைப்பதற்கு இயேசு கிறிஸ்துவை இவ்வுலகில் அனுப்பினார் என்பதை ஏசாயா 25:8ல் பார்க்கிறோம். இனி மனிதன் சத்துருவின் செயலை மேற்கொள்ளவும், அழிக்கவும் அவன் பெலசாலியாக மாறுவதற்காக, அக்கினியை பூமியில் போட வந்தார். தேவன் பரலோகத்திலிருந்து விழுந்து போன தூதனின் தீய செயலை அளிப்பதற்காக பரலோகத்தில் உண்டாக்கிய அந்த அக்கினியை நாம் பெற்று நலமாய் வாழும்படி, இயேசு கிறிஸ்துவிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்து, இந்த பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தார். இந்த அன்பின் இயேசு கிறிஸ்து தமது மாறாத ஆலோசனையினால், அதை நம் வாழ்வில் நம் நன்மைக்காக, ஆசீர்வாதத்திற்காக அருளுகிறார்.

ஆலோசனைகள் எத்தன்மையுடையவைகள்?

1.நாம் நடக்க வேண்டுய வழியை போதிக்கும் ஆலோசனைகள்

"நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்." சங்கீதம் 32:8

இன்று அநேக நேரங்களில், நம்முடைய காரியங்களை, பிள்ளைகளின் காரியங்களை, வேலை காரியங்களில் உண்டாகும் பிரச்சனைகளை, கணவன்/மனைவி நடுவே உள்ள பிரச்சனைகளை, தொழில், வியாபாரம், பொருளாதாரம், கடன் தொல்லைகளை எப்படிச் சந்திப்பது? என்ன செய்வது என்று சிந்திக்கும்போது, கலங்கும்போது, ஆலோசனைகளை நமக்கு அருளிச் செய்து, போதித்து, அவர் நல்வழி நடத்துகிறார். இந்த ஆலோசனையினால் நமது பிரச்சனை தீர சமாதானமும் சந்தோஷமும்  உண்டாகச்செய்வார். இவ்விதமான காரியங்களுக்கு ஆலோசனை  இல்லாதபடியால், ஜனங்கள் விழுந்துபோவார்கள் (நீதி. 11:14). ஆகவே மனிதனுக்கு ஆலோசனை அவசியமாய் இருக்கிறது. அவர் தரும் ஆலோசனைகள் வேத ஒழுங்கின்படி சமாதானத்தை, சந்தோஷத்தை, அன்பின் ஐக்கியத்தை உருவாக்கிறது. இந்த ஆலோசனைப்படி செய்யும்போது, பல ஆசீர்வாதங்கள் உண்டாவதை நாம் காண, அனுபவிக்க முடியும். ஒருமுறை ஒரு சகோதரி, தான் கணவனை விட்டுப் பிரிந்து வாழ்கிறேன் என்று கூறினார்கள். அதினால்  தங்களின் மிகுதியான வருத்தத்தை தெரிவித்தார்கள். தான் நல்ல வேலை பார்ப்பதால் சொந்த வீட்டை வாங்கி நலமாய் வாழ்கிறேன் என்றும் கூறினார்கள். உங்கள் கணவர் இப்பொழுது எங்கே வசிக்கிறார்கள் என்று கேட்ட போது, இந்த ஊரில் தான் என்றார்கள். அவரும் நல்ல வேலை செய்கிறார்கள், அவர்களுக்கும் ஒரு நல்ல வீடு இருக்கிறது என்று கூறினார்கள். அவர்களிடம் நீங்கள் இல்லாமல் என்னால் வாழமுடியும் என்ற எண்ணம் உங்களுக்குள் இருக்கிறது என்றேன். ஆமாம் என்றார்கள். வேதம் உங்களைக் கொடி என்று கூறியிருக்கிறது, நீங்கள் தனித்து வாழ்வீர்களானால் தரையில் உள்ள கொடிகள் போல உள்ள உங்கள் வாழ்வு ஆடுமாடுகளினால் மிதியுண்டு போம், மேய்ந்தும் போடப்படும். உங்களின் ஆசையும் புருஷனைப் பற்றியதாயும் இருக்கும் என்று தேவன் ஏற்கெனவே கூறியிருக்கிறார் என்றேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபொழுது, உங்களின் தவறுகள் என்ன என்று ஆராய்ந்து பாருங்கள். பிரிந்து அல்ல இணைந்து வாழவேண்டும் என்பது தேவ நியமனம். இன்று நண்பர்கள், பெற்றோர்கள், உற்றார், உறவினர்கள், தங்களுக்குப் பிரியமான அல்லது ஆதாயமான வார்த்தைகளை ஆலோசனையாகக் கூறி மனதைக் கெடுத்து விடுகிறார்கள். அந்த சகோதரியைப் பார்த்து உங்கள் உறவுக்கும், நட்புக்கும் உங்களில் உண்டான தவறு என்ன என்று அறிந்து உணர்ந்து, கர்த்தரிடம் அறிக்கை செய்யுங்கள், மனஸ்தாபப்படுங்கள் என்று கூறினேன். பின்பு அவர்கள் ஒரே குடும்பமாக மாறி தேவனைத் துதிக்க ஆரம்பித்தார்கள். கர்த்தரின் ஆலோசனை அவர்களில் ஐக்கியத்தை உருவாக்கிற்று.

2. ஆலோசனையில் ஆச்சரியமானவர்

"...அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்." ஏசாயா 28:29

கர்த்தரின் ஆலோசனைகள் ஆச்சரியமானவைகள். இதனை நம் அனுதின வாழ்விலும், ஊழியத்தின் பாதையிலும் காண முடியும். இதினால் கர்த்தரின் அன்பை, வல்லமையைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். இயேசு கிறிஸ்துவை தங்களின் தெய்வமாகவும் ஏற்றுக் கொள்ள முடியும். அநேக நேரங்களில் இந்த ஆலோசனை இல்லாத படியால் தவறான வார்த்தைகளையும், காரியங்களையும் நாம் சொல்லி இடறலடையச் செய்து விடுகிறோம். ஒருமுறை ஒரு புறமதத்தைச் சார்ந்த குடும்பத்தார் தங்கள் மகளின் வேதனை நீங்கி சுகமடைய வந்தார்கள். அவர்களுக்காக ஜெபித்த போது, கர்த்தர் கிரியைச் செய்தார். அற்புத விடுதலை உண்டானது. நாங்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள், அப்பொழுது நீயும் உங்கள் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்ற வசனத்தின் அடிப்படையில் காரியங்களை விவரித்துச் சொன்னேன். அவர்கள் மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்டார்கள். நாங்கள் செய்த வேண்டுதலை நிறைவேற்ற வேண்டுமே? என்றார்கள். கர்த்தர் தமது ஆலோசனையான வார்த்தைகளைக் கூறி, கூறிச் சொன்னார். இதுவரை நீங்கள் உங்கள் குடும்ப வைத்தியரிடம் சென்று உங்களின் நோய் நொடிக்கு வைத்தியம் செய்தீர்கள், ஆனால் இந்த மகளில் அந்த குடும்ப மருத்துவரின் மருந்தும், treatment-ம் சுகம் தரவில்லை. நாம் நம் குடும்ப டாக்டரிடம் சுகம் கிடைக்கவில்லையே என்று என்ன செய்வீர்கள் என்று கேட்டபொழுது, மற்ற நல்ல டாக்டரிடம் போவோம் என்றார்கள். உடனே நீங்கள் இயேசு கிறிஸ்து என்ற special டாக்டரிடம் வந்திருக்கிறீர்கள் என்றேன். ஆமாம் என்று கூறினார்கள். அப்படியானால் பழைய குடும்ப டாக்டரின் மருந்து மாத்திரைகளை நாம் சாப்பிடாததுபோல, அவைகளின் காரியங்களை செய்யவோ, அவைகளில் ஈடுபடவோ கூடாது என்று கூறியபோது, புரிந்து கொண்டார்கள். கர்த்தரையே தேட, துதிக்க ஆரம்பித்தார்கள். ஆலோசனையில் ஆச்சரியமானவர் இன்று ஜீவிக்கிறார். அவர் அருளும் ஒவ்வொரு ஆலோசனையும் நம் வாழ்வை கிறிஸ்துவுக்குள்ளாக ஸ்திரப்படுத்துவதுடன், மற்றவர் வாழ்வில் மகிமையான காரியங்களையும் செய்யும். இந்த ஆலோசனை கர்த்தரிடம் நம்மை ஒப்புக்கொடுத்து அதின்படி செய்யும்போது, நம்மை அதிசயமாய் நடத்துவார்.

3.பெரிய யோசனை அருள்பவர்

"யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்ல வருமாயிருக்கிறீர்..." எரேமியா 32:19

உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். அவர் யோசனையின்படி நாம் செய்யும் போது பெரிய வெற்றியை ஆசீர்வாதமாக அடைவோம். யோசுவாவிற்கு எப்படி யுத்தம் பண்ண வேண்டும் என்று கூறினார். எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்குத் தடையாக இருந்தது. ஒருவரும் போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை. கர்த்தர் எரிகோவைக் கடந்து செல்ல ஒரு யோசனைக் கூறினார். பட்டணங்களை சூழ்ந்து ஒருதரம் சுற்றி வாருங்கள். இப்படி ஆறு நாள் செய்யுங்கள். 7ம் நாளில் பட்டணத்தைச் சுற்றிவாருங்கள். ஆசாரியார் எக்காளங்களை ஊத வேண்டும். எக்காள சத்தம் கேட்கும்போது, ஜனங்கள் மகா ஆரவாரத்தோடே ஆர்ப்பரிக்கக்கடவர்கள். அப்பொழுது பட்டணத்தின் அலங்கங்கள் இடிந்து விழும் என்றார். இந்த யோசனையின்படி யோசுவா செய்த போது, எரிகோ மதில்கள் இடிந்து விழுந்தன. ஜனங்கள் பெரிய வெற்றியடைந்தார்கள். எரிகோ மக்கள் நம்பியிருந்த கோட்டையும் அலங்கங்களும், துதியின் ஆரவாரத்தில் நொறுங்கின. சத்துருக்கள் நம்பின கோட்டை தகர்ந்தது. அருமையான சகோதரனே, சகோதரியே, இன்று நீ பலவிதமான தடைகளினால் கலங்கி சோர்ந்து போயிருக்கலாம் . அன்று யோசுவாவுக்கு அருளிய ஆலோசனைப்படி தினமும் துதிக்க ஆரம்பி. யோசனையில் பெரியவர் உன் வாழ்வின் தடைகளை நொறுங்கச் செய்வார். உன் திருமண வாழ்வுக்கு தடையா, உன் பிள்ளையின் வேலை தடையா, தாமதமா, வீடு கட்டுவது, வாங்குவது தடையா, நிலத்தை, வீட்டை விற்க முடியாது தடையாக இருக்கிறதா, உன் சரீரத்தில் சுகத்தைப் பெறுவதில் தடையா, வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய விசாவில் தடையா, உன் காரியத்தில் என்ன தடையாக, தாமதமாக இருந்தாலும், கர்த்தரே பெரியவர் என்று எலியாவின் மூலம் ஆரவாரம் செய்தபடி, நீயும் உன் குடும்பத்தாரும் கர்த்தர் பெரியவர் என்று புகழ்ந்து போற்றுவீர்கள். ஒருமுறை வாலிப சகோதரன் எனக்கு இன்னும் நல்ல வேலை கிடைக்க வில்லை, என் நண்பர்கள் தங்கள் திருமணம், வீடு திறப்பு விழா என்று பலவிதமான அழைப்பிதழ்களை அனுப்புகிறார்கள். எனக்கு வேலை கிடைக்காதோ என்று கண் கலங்கினார். அவனுக்கு யோசனையில் பெரியவரின் ஆலோசனையைக் கூறினேன். நீ தினமும் 1 மணி நேரம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து செய்த நன்மைகளை நினைத்து ஸ்தோத்தரி, துதி. அவர் பெரியவர். நீ துதிக்கும் 7ம் நாளில் பெரிய காரியம் நடைபெறும் என்று ஆலோசனைக்  கூறினேன். அந்த வாலிப சகோதரரும்ஆலோசனையை ஏற்று துதிக்க ஆரம்பித்தார். 5ம் நாளில் ஒரு பெரிய கம்பெனியில் முதல் சுற்று தேர்வில் என்னை தெரிந்தெடுத்து இருக்கிறார்கள், தொடர்ந்து ஜெபியுங்கள் என்று கேட்டுக் கொண்டார். 6ம் நாளில் இந்த நாளின் தேர்விலும் தெரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறேன், எனக்காக ஜெபியுங்கள் என்றார். 7ம் நாளில் பகல் நேரத்தில் எனக்கு நல்ல வேலை கிடைத்துள்ளது, இங்கு வாங்கும் சம்பளத்தைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது என்றார். யோசனையில் பெரியவர் இன்றே பெரிய காரியங்களைச் செய்வார்.

4 .நிலைநிற்கும் ஆலோசனைகள்

"...என் ஆலோசனை நிலைநிற்கும் …" ஏசாயா 46:10

வழியைப் போதிக்கும் ஆலோசனைகளும், ஆச்சரியமான, பெரிய ஆலோசனைகளையும் நம் வாழ்வில் கர்த்தர் தருவார். ஒருமுறை சகோதரர் ஒருவர் நான் ஒரு வெளிநாட்டுக்குச் செல்கிறேன், ஜெபியுங்கள் என்று கேட்டுக் கொண்டார். நீங்கள் செல்ல வேண்டாம். சில தினங்களிலேயே திரும்பி விடுவீர்கள் என்று கூறியபோது, கசந்த உள்ளத்துடன் சென்றார். அவருக்கு உள்ளத்தில் ஒருவர் சொன்ன ஆலோசனை நினைவுக்கு வந்ததால், வெளியூருக்குப் புறப்பட்டுப் போனார். ஆனால் துரிதமாய்த் திரும்பி வர வேண்டிய நிலை வந்தது. இன்றைக்கு நாம் பெற்றுக் கொள்ளுகிற ஆலோசனை கர்த்தருடையதா என்று நன்கு அறிந்து செயல்பட வேண்டும். கர்த்தர் நமக்கு என்ன ஆலோனையாகச் சொல்லுகிறாரோ அது மாத்திரமே நடைபெறும். இதனை நன்கு உணர்ந்து அறிந்து செயல்பட வேண்டும். உங்களுடன் இருந்து உங்களுக்கு சொல்லும் சின்ன, பெரிய எல்லா ஆலோசனையின் காரியங்களையும் கர்த்தர் நிறைவேற்றுவார். அது ஒன்றும் தவறாது. அந்த ஆலோசனைகள் நிலைநிற்கக்கூடியவைகள்.

ஆலோசனையில் உண்டாகும் ஆசீர்வாதங்கள்

1. ஆலோசனையினால் சுகம் உண்டாகும்

"...அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்." நீதி. 11:14

இன்று நமக்கு ஒரு வியாதி, பெலவீனம் வரும் என்றால் நமக்குத் தெரிந்த அறிமுகமான மருத்துவரை அணுகி நாம் இனி என்ன செய்ய வேண்டும் என்று ஏற்ற மருத்துவ ஆலோசனையைப் பெற்று துரிதமாய்ச் சுகமடைய விரும்புகிறோம். இப்படிப்பட்ட மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் நிறைந்த நிலையில், நாம் சுகமடைய கர்த்தரை அணுக வேண்டும் என்ற எண்ணம் வந்தால், நீ பைத்தியக்காரி, பைத்தியக்காரன் என்று சொல்லுவார்கள். அன்று 'கிலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்திய னும் அங்கே இல்லையோ? பின்னே என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனால்?' என்ற எரேமியா 8:22ல் கேள்வியின்படி அன்றும் மருத்துவ சிகிச்சை இருந்தது என்று நாம் அறிய முடிகிறது. இரணவைத்தியரும் இருந்தார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. 'அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உன்டாகும் என்பது எப்படி நடைபெறும் என்று எல்லார் உள்ளங்களிலும் கேள்வியாக இருக்கிறது. நாம் கர்த்தர் நல்லவர் என்று ருசித்துப் பார்க்கும்போது, ஆலோசனையினால் ஆறுதலும், அற்புத சுகமும் உண்டாகும். சர்க்கரை நோயினால் மிகுதியாய் பாதிக்கப்பட்ட ஒருவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதுடன், அவரில் உண்டான புண்களினால் மிகுந்த பாதிப்படைந்து மருத்துவமைனையில் சேர்க்கப்பட்டிருந்தார். மருத்துவர் காலின் பகுதியை வெட்டி எடுக்க வேண்டும் என்று கூறி சம்மதம் தெரிவிக்கும் படிவத்தில் கையெழுத்து கேட்டனர். தெய்வம் உண்டாக்கிய சரீரத்தை வெட்டி எடுப்பது தான் உங்கள் மருத்துவ படிப்பா ? சிகிச்சையா ? என்று கையெழுத்திட மறுத்துவிட்டார். நீ சீக்கிரமாய் இறந்து போவாய் என்று மருத்துவர்கள் சென்று விட்டனர். அவரைச் சந்தித்து ஜெபிக்க ஒரு ஊழியர் என்னைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். அவர் தன் தீர்மானத்தைக் கூறினார். நான் இனி ஒன்றும் சாப்பிடாது, தேவனைத் துதிக்கப் போகிறேன் என்றார். அது மிக நல்லது என்று கூறி நாங்களும் அவ்விடம் விட்டு வந்து விட்டோம். அன்று முதல் உள்ளத்தில் ஆழத்திலிருந்து கர்த்தாதி கர்த்தரைத் துதிக்கவும், ஸ்தோத்ததரிக்கவும் ஆரம்பித்து விட்டார். மூன்றாம் நாள் காலையில் அவர் சரீரத்தைப் பரிசோதித்த டாக்டர் ஆச்சரியப்பட்டார். எப்படி உனக்குள் சுகம் உண்டாயிருக்கிறது? என்றார். தன் சாட்சியை மருத்துவரிடம் கூறினார். இன்று மருத்துவ ரீதியாக அநேக பெலவீனங்களை நம் சரீரத்தில் சொல்லலாம். அவர்கள் எந்தவிதமான சிகிச்சை செய்தாலும் சுகம் கொடுக்கிறவர் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. நமது நோய்களை எல்லாம் சுமந்தவர், நம் பெலவீனங்களை ஏற்றவர் இன்றும் ஜீவிக்கிறார். பலவிதமான ஆலோசனை அருளியுள்ள அருள் நாதராகிய இயேசு கிறிஸ்து, தமது வசனத்தை அனுப்பி குணமாக்குகிறார். அழிவுக்கு விலக்கித் தப்புவிக்கிறார். இன்னும் சிலர் வாழ்வில் தமது தழும்புகளினால் குணமாக்கி அவர்களை ஆசீர்வதிக்கிறார். தமது வார்த்தையினால் சுகமாக்கினார், சுகமாக்கிக்கொண்டும் இருக்கிறார். இந்த சரீர சுகத்தை மாத்திரம் அல்ல நமது ஆவியிலும், ஆத்துமாவிலும், தமது அற்புதமான ஆலோசனையின் வார்த்தையினால் சுகத்தைக் கொடுக்கிறார்.

2. ஆலோசனையினால் குறை நீங்கும்

"இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள். அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து" யோவான் 2: 7, 8, 9

இயேசு கிறிஸ்துவின் முதலாவது அற்புதமானது கானா ஊரிலே ஒரு திருமண வீட்டில் நடைபெற்றது. இந்த திருமண வீட்டிற்கு தாயாகிய மரியாளும், இயேசு கிறிஸ்துவும், சீஷர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். திருமண வீட்டில் திராட்சரசம் குறைவுப்பட்டைத் தாயாகிய மரியாள் தெரிந்து, அந்தக் குறை நீங்க இயேசு கிறிஸ்துவிடம் தெரிவித்தாள். தாயின் வேண்டுதல்களை இயேசு நிராகரித்து, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். தன்னால் குறை தீர்க்க முடியாத தாயாகிய மரியாள், 'அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்று கூறினார்கள். அந்தப்படி அந்த வீட்டின் வேலைக்காரர், குறை உண்டான திருமண வீட்டில் குறைதீர இயேசு கிறிஸ்துவிடம் வந்தார்கள். கற்சாடிகளைத் தண்ணீரால் நிரப்பக் கூறினார். அவர்கள் அதை நிரப்பிய பின் பந்தி விசாரிப்புக்காரனிடம் அனுப்பினார். ருசிபார்த்த பந்திவிசாரிப்புக்காரன், மணவாளனை அழைத்து புகழ்ந்தார். முந்தி நல்ல ரசத்தைக் கொடுத்து, பின்பு ருசி குறைவானதை பரிமாறுவார்கள். நீரோ நல்ல ரசத்தை வைத்து வைத்திருந்தீரே என்று கூறினான். அன்பு சகோதரனே, சகோதரியே, இயேசு கிறிஸ்து நம் குறைகளைத் தீர்க்க உண்மையுள்ள தேவன். அவர் தம் வல்லமையான ஆலோசனையினால் மாற்றங்களை உண்டாக்குவார். இந்தத் திருமண வீட்டார் எப்படி இயேசு கிறிஸ்துவை அழைத்தார்களோ, அப்படியே இயேசு கிறிஸ்துவை உங்கள் வீட்டில் அழைத்து, அவர் உங்கள் குறைவுகளில் கூறும் ஆலோசனைப்படி செய்யும்போது, உங்கள் குறைவு எப்படிப்பட்டதாய் இருந்தாலும் நிவிர்த்தியாகும். ஒருவேளை உங்கள் பொருளாதாரக் குறைவாக இருக்கலாம். தொழிற்சாலையிலே முதலீடு செய்ய ஒன்றுமில்லையே என்று கலங்கிக் கண்ணீரோடு வாழ்ந்து கொண்டு இருக்கலாம். எங்களுக்கு பிள்ளையில்லையே என்று மிகுந்த துக்கத்தோடு ஏங்கி நீங்கள் இருக்கலாம். எனக்கு ஞானமில்லையே, என்ன செய்வதென்று கலங்கிக் கொண்டு இருக்கலாம்.உங்கள் குறைவுகளை தம் ஆலோசனை வார்த்தையினால் தீர்ப்பார். 'நீயோ கடன் வாங்குவதில்லை' என்ற தம் வாக்குறுதியை நிறைவாக்குவார். இந்தக் குறை தீர்க்கும் இயேசு கிறிஸ்துவை நாம் தேடும்போதே அதிசயங்கள் நடைபெறும். என் வாழ்வில் சுகம் இழந்து மிகவும் சோர்ந்து போய் இருந்தேன். 12ம் வகுப்பு மாணவர்களை கால்பந்தாட்டத்தில் பயிற்சி தந்து, வெற்றியைக் கண்ட என் வாழ்வில் பலவிதமான கவலையும், கண்ணீரும் பெருகிவிட்டது. மற்றவர்களை வாகனத்தில் அமர்த்தி செல்லவேண்டிய இடங்களுக்கு அழைத்துச் சென்ற நானே, மற்றவர் வாகனத்தில் அமர்ந்து செல்லவேண்டிய நிர்பந்த நிலை ஏற்பட்டு விட்டதே என்று உடைந்த உள்ளத்துடன் வீடு திரும்பிக் கொண்டு இருந்தேன். ஒரு தட்டிடுவண்டியில் மாம்பழம் விற்றுக் கொண்டு இருந்த மனிதர், அந்த வண்டியைத் தள்ளிச் சென்றார். மூன்று சக்கர தட்டு வண்டியின் ஒரு சக்கரம் சிறிய குழியில் விழுந்தபோது, வண்டியில் இருந்த ஒரு மாம்பழம் உருண்டு கீழே விழுந்தது. மாம்பழ வியாபாரி தன் கையை நீட்டி அழகாக அதைப்பிடித்தார். கிரிக்கெட் விளையாட்டில் catch பிடிப்பதைப்போல் பிடித்தார். அதே சமயம் கர்த்தரின் வார்த்தை உள்ளத்தில் தொனித்தது. 'பிதாவின் சித்தமில்லாமல் அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது' என்று அது என் உள்ளத்தை முழுமையாக தேற்றும், மாற்றும் வார்த்தையாக உன்னத ஆலோசனையாயிருந்து. உங்களை நேசிக்கிற கர்த்தர், என் பெலன் குறைந்துவிட்டது என்று கலங்குகிற உங்களை, தம் ஆலோசனையின் வார்த்தையினால் பெலப்படுத்துகிறவராக இருக்கிறார். உங்கள் வாழ்வின் எல்லா குறைவையும் நிறைவாக்குகிறார்.

3. ஆலோசனையினால் சுத்தமாக்குவார்

"அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் முழுகினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்." 2இராஜாக்கள் 5:14

குஷ்டரோகி என்றாலே எல்லாருக்கும் மிக அருவறுப்பானவன். அந்த வியாதியினால் தன் சரீரத்தின் சுத்தத்தை இழந்து வேதனையடைகிறான். அவனுடைய சரீர உறுப்புகளும் உருக்குலைந்து பலவிதமான அகோரமான காட்சியுடையவனாக தோன்றுகிறான். இவ்விதமான மக்களை சமுதாயம் வெறுக்