பிள்ளைகளின் நல் வாழ்வுக்காக ஒரு ஜெபம் 

                                         அன்பின் தேவனே , இந்த நல்ல வேளைக்காய் நன்றி கூறுகிறேன். இதுவரை என் ஜெபத்தைக் கேட்டு சமாதானத்தைப்   பெருகச் செய்தவரே, சுற்றுப்புறங்களிலுள்ள பல பிரச்சனைகளினால் ஏற்பட்ட பதட்ட நிலைகளும், சமாதானமற்ற சூழ்நிலைகளும் மாறவும் கெஞ்சி நிற்கிறேன். என் பிள்ளைகளும் அவர்கள் நண்பர்களும் இவ்விதமான காரியங்களில் ஈர்க்கப்பட்டு விடாதபடி தயவாய் அவர்களைக் காத்து நடத்தும். கர்த்தாவே . எவ்விதப் பாதிப்பும் என் எல்லைகளில் தோன்றிவிடாதபடி எங்களைக் காத்துக்கொள்ளும் . உன் பிள்ளைகளின் சமாதானம் பெரிதாயிருக்கும் என்றுச் சொன்னீரே , அவர்கள் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள் என்றுச்  சொன்னீரே, அவர்கள் கர்த்தரால் போதிக்கப்பட்டிருக்கவும் , உமது பண்புகளினால் நிறைந்திருக்கவும் உம்மிடம் கெஞ்சுகிறேன். அவர்கள் உமக்குப் பயந்து உண்மையைக் காத்துக் கொண்டு  நடக்க அவர்களுக்கு உதவிச் செய்யும் . உள்ளத்தில் பரிசுத்தம் நிறைந்தவர்களாய் , அனுதினமும் உம்மைத் தேடுகிறவர்களாய் மாற உதவிச்செய்யும் . இயேசு கிறிஸ்துவே அவர்கள் பிசாசின் தந்திரங்களில் சிக்கிக்கொள்ளாதபடியும் , தவறான தீர்மானங்களைச் செய்து விடாதபடியும் தெளிந்த புத்தியுள்ளவர்களாய் வாழ உதவிச்செய்யும்.

    இயேசு கிறிஸ்துவே , அவர்கள் நற்பண்புகள் உள்ளவர்களுடன் பழக உதவிச் செய்யும் . கர்த்தாவே  உமக்குப் பயந்து உமது வார்த்தைகளுக்கு மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிகிறவர்களாய் நற்சாட்சியுடன் வாழ உதவிச்செய்யும். இயேசு கிறிஸ்துவே , அவர்கள் உமது ஆலயத்தில் நாட்டப்பட்டவர்களாயும் இருக்க உதவிச்செய்யும் . இயேசு கிறிஸ்துவின் பண்புகள் அவர்களில் பிரதிபலிக்க நீர் உதவி செய்யும் .இன்று அவர்களில்  காணப்படுகிற பதட்ட நிலைகளும் வீணான கவலைகளும் நீங்கி எப்பொழுதும் உம்மில் உள்ள விசுவாத்தில் வளர்ந்தோங்க உதவிச்செய்யும் . உமது வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டு என்றுச் சொன்னீரே, அந்த வார்த்தையின்படி எனது பிள்ளை பிள்ளைகள் சமாதானத்தில் பெறுக உதவி செய்யும் . கர்த்தாவே, என் பிள்ளைகளின் நிமித்தமாய் நானும் என் கணவரும்/மனைவியும் சமாதானமாயும் , சந்தோஷமாயும் வாழ உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவே  என் ஜெபத்தைக் கேட்டு  என் பிள்ளைகளில் மாற்றத்தை முழுமையாய்க் கட்டளையிடுவீராக . இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே ஜெபம் கேளும் பிதாவே. ஆமென .